பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீ.

235



ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள்;-கோட்டை
வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி
செயிர்வேழ மாகுத லின்று 358

இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந்-தொன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர் 359

நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும்;-ஓரும்
நிறைப்பெருஞ்ச் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப்பெருங்கல் லன்னா ருடைத்து 360

37. பன்னெறி


மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம்?-விழைதக்க
மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோர் காடு 361

வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின், இழுக்கெனைத்துஞ்
செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது 362

எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம்;-சிறுகாலை
அட்டில் புகாதான் அரும்பிணி-அட்டதனை
உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய்;-இம்முவர்
கொண்டானைக் கொல்லும் படை 363