பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



கடியெனக் கேட்டுக் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்;-பேர்த்துமோர்
இற்கொண் டினிதிருஉம் ஏமுறுதல் என்பவே,
கற்கொண் டெறியுந் தவறு 364

தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்
கிடையே இனியார்கட் டங்கல்; கடையே
புணராதென் றெண்ணிப் பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை 365

கல்லாக் கழிப்பர் தலையாயர்,நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்,கடைகள்
இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர் 366

செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்
செந்நெல்லே யாகி விளைதலால்-அந்நெல்
வயனிறையக் காய்க்கும் வளவய லூரா!
மகனறிவு தந்தை யறிவு 367

உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால்போற்
கீழ்மேலாய் நிற்கும் உலகு 368

இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார்;-மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று 369