பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



பொத்தகநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல்
நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த - பொற்றொடியும்
போர்தகர்க்கோ டாயினாள்; நன்னெஞ்சே!
நிற்றியோ போதியோ நீ? 376

ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள் கொண்டு
சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை 377

ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்
தாம் ஆர்ந்த போதே தகர்க்கோடாம் - மான்நோக்கில்
தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே
செந்நெறிச் சேர்தும்என் பார் 378

ஊறுசெய் நெஞ்சம்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேறமொழிந்த மொழிகேட்டுத் - தேறி
எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
தமரல்லர் தம் உடம்பினார் 379

உள்ளம் ஒருவன் உழையதா வொண்ணுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி
அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த வுடம்பி னார் 380

39. கற்புடை மகளிர்


அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும், விரும்பிப்
பெறுநசையாற் பின்னிற்பா ரின்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை 381