பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

27


விட்டார்களா? இல்லை; அது பற்றி எரிந்து பசையற்றுவிட்டது; குழிவிழுந்த கண்; பனம் நுங்கு; நுங்கு எடுத்துவிட்ட குழி; பயங்கரமாக இல்லையா! இவளா அழகி? யோசித்துக் கூறு.”

“அவள் நகை முல்லை முகை என்பாய்! நீ கூறுவது எல்லாம் வெறும் மிகை; அதோ சிதறிக் கிடக்கிறதே எலும்புத்துண்டு. அது நீ புகழ்ந்து பேசிய அதி அற்புதப் பல்; பல் என்று நீ இப்பொழுது கூறமாட்டாய். அது வெறும் கல். இதனை அறிந்து கொள்.”

“நில்! அது வெறும் எலும்புத்துண்டு என்று சொல். நீ ஒரு ஞான சூரியன்; யாரோ சொன்னார்கள். ‘தொகுமுகை இலங்கு நகை” என்று; பிறர் சொல்லக் கேட்டுப் பேசுகிறாய். அது கவிதை, முல்லை; அது பல் என்று மாற்றிக்கூறி மகிழ்கிறார்கள். ‘பல் அழகு’ என்று சொல்லிக் கொண்டிருந்தால் அது பொய்; அது வெறும் எலும்புச்சில்; யாரோ இப்படித் தவறாகச் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். பெண்ணை நீ மதிக்கலாம்; வேண்டுமானால் தெய்வம் என்று துதிக்கலாம்; விருப்பம் இல்லை என்றால் வெறுத்து ஒதுக்கலாம். ஆனால் அழகி என்று அளக்காதே.”

“செத்துவிட்டாள் ஒருவன் காதலி, வண்டி ஏறி அவள் வகைப்பட்டுவிட்டாள்; மனையில் கொண்டு சென்று மருத்துவர் அவள் சாவின் அருத்தத்தை ஆராய் கின்றனர். காதலியைத் தேடிக்கொண்டு அந்தக் காரிருளில் கனவேகத்துடன் ‘அறுப்பு மனையில்’ நுழைகிறான். வெள்ளை அங்கி அவளை மூடி இருந்ததால் அவள் முகத்தை மட்டும் காட்டினர் அஃது அவன் காதலி