பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

நாலடியார் செய்யுளும் செய்திகளும்




11. ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்
(பழ வினை)

அவரவர் செய்யும் நல்வினைகள் தீவினைகள் எவையும் அவரை விட்டுப் போவது இல்லை “தினை விதைத்தவன் தினை அறுக்கிறான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்” இது பழமொழி. உன் பழைய வினைகள் உன்னைத் தேடி வந்து அடையும்; தப்பித்துக் கொள்ள முடியாது. பசுவின் கூட்டத்தில் நல்ல ஓட்டமுடைய கன்றுக் குட்டியை விட்டால் அதன் நாட்டம் அதன் தாய்ப் பசுவை நாடித்தான் செல்லும்; அந்தக் கூட்டத்தில் தன் தாய் யார் என்று கண்டு கொள்ளும்; அதே போலத்தான் நீ தோற்றுவித்த பழவினை நீ எங்குச் சென்றாலும் விடாது. சோழ நாட்டை விட்டு மதுரை சென்றாலும் அது பின் தொடராமல் இல்லை; கண்ணகியைப் போலவே தொடர்ந்து சென்ற ஊழ்வினை கோவலன் வாழ்வினைப் பாழ்படுத்தியது. அவன் சாவுக்குக் காரணம் பழவினை என்றுதான் இளம் அடிகள் அளந்து கூறுகின்றார். காவியம் உணர்த்தும் உண்மைகளில் இஃது ஒன்று.

அறம் என்பது யாது? பிறர்க்கு உதவுவதே நல்லறம் ஆகும்; அம்மனப்பாங்கு ஏற்பட வாழ்வின் நிலையாமையை உணர்ந்துதான் ஆக வேண்டும்.

“என்றும் செல்வம் நிலைக்கும்; இளமை கொழிக்கும்; அதிகாரம் நிலைக்கும்; அழகு சுவர்க்கும்;