பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

53


நல்லவர்கள் தாழ்வதும் அல்லவர்கள் உயர்வதும் நியாயம் என்று கூற முடியாது. என்றாலும் உலக நியதி அப்படி அமைந்துவிட்டது. அதைத்தான் ‘விதி’ என்று கூறுகிறோம்.

இந்தப் பரதேசிப் பயல்கள் இவர்கள் அணி அணியாக வீடுகள் நோக்கித் தம் கேடுகளைச் சொல்லிக் கையேந்தி நிற்கிறார்களே இப்படி இவர்கள் வறுமை உறுவதற்குக் காரணம் என்ன? இளமையில் தக்க கல்வி கல்லாமை; தொழில் செய்யத் தம்மைத் தகுதியாக்கிக் கொள்ளாமை; வருவாய் வந்தபோது வகையாகப் பிடித்து வைக்காமை; என்று பதில் கூறப்படுகிறது. ஏன் இத்தவறுகள் இவர்கள் செய்ய வேண்டும். விதி அவர்களுக்கு வழி காட்டவில்லை; அவர் மதி கெட்டுவிட்டது.

கல்வி கற்றவன்; ஒழுக்கம் மிக்கவன்; பண்பு உடையவன்; அறிவாளி; இவனும் மிகப் பெரிய தவறு செய்கிறான் என்றால் அதை நம்மால் நம்பவே முடிவதில்லை. ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பது பழமொழி. எப்பேர்பட்டவனும் தப்பேதும் செய்யாதிருக்க முடியாது. இதற்கு எல்லாம் காரணம் வினையின் ஆற்றல். “அவன் புத்தி தடுமாற வேண்டும் என்று இருக்கிறது” என்றுதான் கூறவேண்டும். சபலத்துக்கு இரையாகி விட்டான். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. நடுநிலைமை கெட்டுவிட்டான்; அவன் நன்மதியால் பொருள் கை நீட்டி வாங்குவதில்லை என்று உறுதியோடு வாழ்ந்தவன்தான்; மாசுமரு அற்ற வாழ்க்கை; அன்று அவன் கெட்ட காலம். ‘யார் அறியப் போகிறார்கள்? கொடுத்தவன் சொல்லப் போவது இல்லை; வருவது வேண்டாம் என்று எப்படித் தள்ளுவது?” என்ற சிறு