பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


சபலம்; அடுத்த வினாடி, அவனுக்குக் கைவிலங்கு. தொண்ணூற்று ஒன்பது நாள் அவன் பத்தினி, உலகம் மன்னிக்காது எல்லாம் விதியின் செயல்; மற்றொருவன் யார் ஜோலிக்கும் போகான்; தான் உண்டு; தன் வீடு உண்டு என்று வாழ்ந்து வரும் மண்டு; நன்மையையும் தேடுவது இல்லை; தீமையையும் நாடுவது இல்லை. அவன் வீட்டில் அன்று திருடன் புகுந்து அவனை அடித்துப் போட்டு விட்டு உள்ளதைச் சுருட்டி எடுத்துக் கொண்டு போய்விட்டான். இது செய்தி, அவன் யாருக்கும் ஒரு தீங்கும் செய்தது இல்லை; அப்பாவிதான்; எந்தப் பாவியோ அவனை அடித்துப் போட்டான். காரணம் விதி; அதனால் ஏற்பட்டது இந்தக் கதி.

முருகா! உனக்கு வந்த செல்வம் சிறுகாது; பெருமை அருகாது; முறைகெட்டுத் தாரார். வருவது வந்து தீரும்; போவது போய்த்தான் தீரும். இன்னாருக்கு இன்னது என்று முன்னாளே அவன் எழுதிவிட்டான்; அவன் எழுதியதை யாரும் மாற்ற முடியாது. அரசியல் சட்டம் அன்று தேவைக்கு ஏற்ப மாற்றுவதற்கு; எனவே அந்த எழுத்து நன்கு அமைய வேண்டுமானால் உன் காரியங்களும் நன்மையில் அமைய வேண்டும். அப்பொழுதுதான் மூல ஆசிரியன் முதல் மதிப்பெண் தருவான்; சரியாகப் படிக்காவிட்டால், தேர்வு எழுதாவிட்டால் வட்டம்தான்; அதனால் வாட்டம்தான்.