பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


செய்வது ஒன்று; சொல்வது ஒன்று. இந்த முரண்பாடுகள் மதிக்கத் தக்கவையா? நீயே முடிவு செய்க!

பிரகலாதன் கதை தெரியுமா? அவன் நாரணன் பக்தன்; இரணியன் அவனை எவ்வளவோ மாற்ற முனைந்தான். ஆசிரியர்கள் அவனைப் பலமுறை திருத்த முயன்றனர். மாற்றவே முடியவில்லை. நன்மையைத் தீயதாக மாற்ற முடியாது. கரும்பைக் கசக்கச் செய்ய இயலாது. அதே போல வேம்பை இனிக்கச் செய்யவும் முடியாது. இராவணனை மாற்ற முனைந்தவர் பலர்; தம்பியர் இருவர்; துணைவி ஒருத்தி மண்டோதரி; இவ்வளவு பேரும் தோற்றுவிட்டனர்.

இறுதிவரை சீதையை மறக்கவே இல்லை. மூடர்களை மாற்ற முடியாது; கல்வி கற்பதும் பயன் இல்லை. காந்தி மகான் கதையும் மாற்றாது. நாய் வாலை நிமிர்த்த முடியாது. இவை வாழ்க்கை உண்மைகள். உம்முடைய கருத்து என்ன?

இந்த வீட்டில் ஏன் திடீர் கூட்டம்? அவனுக்கு லாட்டரி சீட்டில் லட்சம் பத்து விழுந்ததாம்.

அதற்காக ஏன் இவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

அந்தக் காற்றில் குளிர்காய விரும்புகிறார்கள்.

நடிகை நட்சத்திரமாகிவிட்டாள்; அவள் ஒரு காலத்தில் அவள் தாய் அவளை வீட்டை விட்டுத் துரத்தினாள் இவள் எதற்கும் உதவாதவள் என்று. இன்று அவள் தாய் காரியதரிசி அவள் பிரியதரிசினி.

தேர்தலில், வெற்றி பெற்றுவிட்டான்; எம்.எல்.ஏ; அமைச்சர் பதவி; வோட்டுப் போடதவர்கள் எல்லாம்