பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

59



“மதியதார் வாசல் மிதிக்க வேண்டாம்; துஷ்டனைக் கண்டால் தூர விலகி விடு”, “தீயவரைக் காண்பதுவும் தீதே, தீயார் சொல் கேட்பதுவும் தீதே” - இப்படிப் பல பழமொழிகள் உள்ளன.

ஒரே குழப்பமாக இருக்கிறது; “தீமை செய்தாலும் திரும்ப நன்மையே செய்க” இது வள்ளுவர் வாக்கு; ஏசுநாதர் அறிவுரையும் ஆகும். “தீயவனை விட்டு விலகி விடு. அவனை நீ மதிக்காதே; அவனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது பெருந்தவறு” இது நாலடியார் கூற்று.

இந்த இரண்டில் எது சரி! முடிவு செய்து மூன்று நாளில் விடை தருவோருக்கு முந்நூறு பரிசு வழங்கப்படும். இஃது இன்றைய டி.வி. விளம்பரம்.

“கரை இல்லாத வேட்டியே இல்லை; குறை இல்லாத மனிதனே கிடையாது. மான் குட்டிக்கு எத்தனை புள்ளிகள்! அந்தப் புள்ளிகளுக்காக அதன் தோலைப் புறக்கணிப்பது இல்லை. தபால் சேவகன் காசு கேட்கிறான் என்பதால் அவன் தரும் கடிதத்தைப் பிரித்துப் படிக்காமல் இல்லை; மாமூல் கேட்கிறான் என்றால் அவனை வேலை விட்டு நீக்குக என்று யாரும் கூறுவது இல்லை; கொள்ளை அடிக்கிறார்கள் அரசியல் கட்சிக்காரர்கள் என்றால் அவர்களை அணுகாமல் இருக்க முடிவதில்லை; குறையில்லாத மனிதர்களே இல்லை; குறையுடைய மனிதர்களிடையேதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நன்கொடை கேட்கிறார்கள் என்பதால் பையனைப் படிக்க வைப்பதை நிறுத்த முடியுமா? குறைகளைத் திருத்துவது வேறு; அவர்களை