பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

61



வாழ்க்கையில் நீ பொருள் ஈட்டுகிறாய். கடினமான உழைப்பு உனது. “ஈக பிறர்க்கு உதவுக” என்கிறார்கள். “அதுவே புகழ் தரும்” என்கிறார்கள். நீ என்ன நினைக்கிறாய்? பொருளை இறுகப் பிடித்துக் கொள்வது நல்லதா? நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துவது நல்லதா?

“இன்பம் இந்த உலகம் அள்ளித் தருகிறது; துள்ளும் இளமை உனது; இன்பத்தில் தோய்ந்து மகிழ்ந்து கிட அதுதான் தக்கது” இப்படிக் கூறுகின்றவர். பலர்; “நீ கொள்கைகளில் உறுதியாக இரு. இன்பம், பொருள் இவற்றை நாடுவதில் நாட்டம் காட்டாதே. அறமே வாழ்வின் நியதி; குறிக்கோள். அதற்காக வாழ்ந்தால் வீடுபேறு கிடைக்கும்” என்கின்றனர் சிலர். நீ எதை விரும்புகிறாய்? உண்மை எது? எழுதிச் சில வரிகளில் விடை தருக; மதிப்பெண்தான் தர முடியும். ஆசிரியர்கள் கையில் அதுதான் இருக்கிறது வாரி வழங்க.


13. தீயவை செய்ய அஞ்சுக
(தீவினை அச்சம்)

வாயில்லாத ஜீவன்கள்; எதிர்த்துப் பேச இயலாத உயிர்கள்; அவற்றை வதைத்து வயிற்றில் அடக்குகிறீர்கள்; உங்கள் வயிறு என்ன சுடுகடா? இல்லை புதைகாடு.

செத்துவிட்டவர்களை ஊருக்குள் புதைத்து அவர்களை அடக்கம் செய்ய அஞ்சுகிறீர்கள். ஏன்? அது