பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


முடை நாற்றம் வீசும் என்பதால், ஆடு, கோழி இவற்றை அடித்துக்கொன்று அவற்றைப் புதைத்து வைக்க உங்கள் வயிற்றைத் தேடுகிறீர்களே! உங்கள் வயிறு அழுகல் அடுக்கும் குப்பை மேடா?

தூய உடம்பை வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மாய்ந்த சடலங்களைத் திணிப்பதைத் தவிருங்கள். தீவினைகள் என்பவை கொள்ளை, கொலை, கள்ளம் இவை மட்டும் அல்ல; உயிர்க் கொலையும் தீவினை தான். ‘புலால் மறுத்தல்’ நல்வினைகளுள் நயத்தக்கதாகும். இஃது அருளறத்தின் அடிப்படையாகும்.

கொலைத் தொழிலை விலைத் தொழிலாக மாற்றி உயிர்களை அலைத்துத் துன்புறத்துவது கொடிது; இவற்றோடு வயலில் வலைவிரித்துப் பல்வகைப் பறவைகளைப் பிடித்து, அவற்றின் தோலை உரித்து, வதைத்து, உயிர்க் கொலை செய்து, ‘சுவைக்கிறது’ என்று தின்று மகிழ்கின்றனர். வானத்து வண்ணப் பறவைகள் அவற்றின் சிறகுகளை உடைத்து முடமாக்குகின்றனர். பறவைகளை வாட்டும் வேட்டுவனைச் சிறைப்பிடித்து விலங்கிட்டு இழுத்துச் சென்றால் அவன் இன்னல் எத்தகையதாக இருக்கும்? எண்ணிப் பார்க்கிறானா? வாயற்றவை; எடுத்து உரைக்கத் தெரியாது. நீ மானிடன்; கத்திக் கதறிக் கொடுமை என்று புலம்புவாய்; சட்டம் உன்னை விடுவிக்கும். நீ மட்டும் உன் கொலைத் திட்டத்தை விட்டு விலகமாட்டாய். நியாயந்தானா? உன் செயலை நிறுவி அது தக்கது என்று தோற்றுவிப்பாய்.

கோழிப்பண்ணைகள்; அவை விற்பனைத் திண்ணைகள்; அவற்றுள் ஒன்றைப் பிடித்து அடித்துக் கொன்று தோல் வேறு உடல் வேறு என்று பிரித்துப்