பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


வளர்பிறை போன்றது; தீயவரோடு நட்பு தேய்பிறை போன்றது;‘வர வர மாமியார் கழுதைபோல் ஆனாள்’ இது பழமொழி. நட்பும் அத்தகையது; அது திருப்பி எட்டி உதைத்தாலும் வியப்பதற்கு இல்லை.

யாரையும் முழுவதும் நம்புவதற்கு இல்லை; விழிப்பாக இருக்க வேண்டி இருக்கிறது? நல்லவர்களைத் தேடுகிறோம்; சான்றோர் என்று மதிக்கிறோம்; சேய்மையில் இருந்து பார்க்கும்போது அவர்கள் தூய்மை நிறைந்தவர் என்று தோன்றுகிறது. நெருங்கிப் பழகினால் அவர்கள் சுருங்கிய உள்ளம் கண்களில் படுகின்றது. சந்தனம் உள்ளே இருக்கும் என்று கருதி அந்தப் பெட்டி யைத் திறந்து பார்த்தால் பாம்பு அங்கே படுத்துக் கிடக்கிறது. அதிர்ச்சி ஏற்படுகிறது; ஏமாற்றம் காணப்படுகிறது. யாரையும் புறத்தோற்றம் கண்டு மதிப்பதற்கு இல்லை.

யாரும் ஒருவர் உள்ளத்தை மற்றவர்கள் ஆராயும் திறன் படைத்தவர் அல்லர் காண்பது ஒன்று; அவர்கள் உள்ளம் வேறு! பேசுவது ஒன்று நடந்து கொள்வது வேறு ஆக இருக்கிறது. மனம் வேறு; செயல் வேறு என்று பலர் உலகில் நடந்து கொள்கின்றனர். எனவே தக்க நட்பினர் யார் என்று தேடிக் காண்பது எளிது அன்று.

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பச்சோந்திகள் அவர்களை நம்ப வேண்டாம். சமயத்தில் கழுத்து அறுத்து விடுவார்கள்; எனவே பொன்னை உரை கல்லில் வைத்துப் பார்ப்பதுபோலக் கொஞ்சம் தேய்த்துப் பார்த்தே நட்பினைத் தேர்ந்துகொள்க. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்; ஒன்று இரண்டு