பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



ஒரு சிலர் மட்டும் படித்து இனம் இனமாக முன்னேறிவிட்டனர். அவர்களைக் கோயில் குருக்கள் என்றும், கணக்குப் பிள்ளைகள் என்றும், கல்வி ஆசான்கள் என்றும், கவிஞர்கள் என்றும் இந்தப் புவிஞர்கள் வேறுபடுத்தினர். இன்று உள்ள பிரச்சனை கீழ் மட்டத்து மக்கள் கல்வி கற்கவேண்டும்; அவர்கள் உயர்வதற்கு அதுதான் வழி. கல்விச் செல்வம் எல்லா இனத்தவரும் அடைய முடியும்; அதனால் அவர்கள் உயர்வு பெறுவர். சாதிபேதமும் சமூக அநீதிகளும் மறையக் கல்வி வாய்ப்பு அனைவர்க்கும் தரப்பட வேண்டும். கல்வி கற்றவன் எந்தச் சாதியாயினும் அவனைச் சமூகம் வரவேற்கிறது; பாராட்டுகிறது. உயர்த்துகிறது.

சொத்து வைக்க எண்ணுகிறாய்; லட்சங்கள் சேர்த்து வைக்கிறாய். அடுத்த தலைமுறை; அது தானும் அழிகிறது; உடையவனையும் அழிக்கிறது; பொருள் அவனைக் கெடுக்கிறது; செல்வச் செருக்கர்ல் அவன் கல்விப் பெருக்கைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. அறிவு குறைந்தால் ஏனைய நிறைவுகள் அமைவது இல்லை. இவனைவிடக் கற்றவன் திறமையாகச் செயல்படுகிறான். தொழில்களில் அவன் வெற்றி காண்கிறான்; இவன் தோல்வி பற்றுகிறான். எனவே சொத்து என்று மக்களுக்கு வைக்க நினைத்தால் கல்விச் செல்வமே உயர்ந்தது; நிலைத்தது; அழியாதது; ஆக்கம் தருவது; ஏற்றம் உண்டாக்குவது.

பொருட் செல்வம் சேர்த்து வைத்தால் நேர்த்தியாகப் பிறர் கொள்ளை அடித்துக் குறைத்துவிடுவர். ஒரே நாள் மலை மடு ஆகிவிடும்; பொன்னன்