பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

69


என்று பேசப்பட்டவன் நன்னன் ஆகிவிடுவான். சிறு பொறி போதும்; அது மிகுந்தால் மலை போன்ற குவிவுகளையும் அழித்து விடும். நெருப்புக்கு எதுவும் முன் நிற்காது. அழிவுக்கு அரசன் தீ தான்; கல்வியை அழல் ஒன்றும் தொடமுடியாது; கல்வி நிரந்தரமானது; ஊற்றுப் பெருக்கு அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.

இந்த அரிய கல்வி அதற்கு அளவு உண்டா? கரை இல்லை. கற்பவருக்கு நாள்கள் போதா, மெல்ல நினைத்துப் பார்த்தால் அதற்குள் நோய்கள் பல; அதனால் கண்டதைக் கற்றுப் பண்டிதன் ஆகலாம் என்ற நினைப்பை அகற்று. தேடிப் படி; நல்ல நூல்கள் உயர்வுக்கு மாடிப்படி:அன்னப்பறவை நீரும் பாலும் கலந்து வைத்தால் நீரை ஒதுக்கிப் பாலை மட்டும்தான் குடிக்கும். அதுபோல நல்ல நூல்களைத் தேர்ந்து எடு; குப்பைக் கூளம் அதனை நாடாதே; முத்துக் குவியலைத் தேடு, கத்தும் குயில் ஓசை இனிது; சத்தம் செய்யும் திரை இசைப் பாட்டு எல்லாம் கேட்டு உன் ரசனையைப் பாழ்படுத்திக் கொள்ளாதே, சுவை, ஒளி, ஓசை, ஊறு, நாற்றம் இதன் வகை தெரிந்து அறிவு பெறுபவன் உலகில் உயர்வான். கலைமகள் அவள் என்றும் கற்றுக் கொண்டே இருக்கிறாள் கேட்டர்ல் என்ன கூறுகிறாள்? “கற்றது கை மண்ணளவு. கல்லாதது உலகு அளவு” என்று ஒதுகிறாள். கல்விக்குக் கரை இல்லை; அதில் அக்கரை காட்டு; வாழ்வில் கரை ஏறலாம்; கறை நீங்கி வாழலாம்.

தோணி ஓட்டும் படகுக்காரன் அவன் குகன்தான்; அவனிடம் நட்புப் பாராட்டினான் இராமன், ஏன்? அவன் அன்பினன், கறையற்ற காதலன். சாதி இருவர் இடை