பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

73



15. குடிப்பெருமை போற்றுக
(குடிப் பிறப்பு)

பசி தன்னைப் புசிக்கிறது என்றாலும் சிங்கம் கொடிப் புல்லைக் கடித்துக் கூடப் பார்க்காது உடுக்க உடையின்றி, கிடக்க இடமின்றி, உண்ணச் சோறும் இன்றி வறுமை உற்றபோதும் நல்ல குடியில் பிறந்தவர் தாழ்ந்து போகமாட்டார்கள்; பிறர் கையேந்தி நிற்கமாட்டார்கள், ஈக என்று கேட்டு உண்ணமாட்டார்கள்; பெருமை குன்றும் செயல்களைச் செய்யமாட்டார்கள்; தவறான வழிகளில் சென்று பொருள் ஈட்டமாட்டார்கள்; அவை தம் குடிக்கு இழுக்கு என்று வழுக்கியும் தவறு செய்ய மாட்டார்கள். தான் பிறந்த குடும்பத்தின் பெயர் கெடும்படி நடந்து கொள்ளமாட்டார்கள்; நாட்டை அன்னியரிடம் காட்டிக் கொடுக்கமாட்டார்கள்; குடிக்கு ஊறு நிகழத் தக்க அழிசெயல்களில் ஆழ மாட்டார்கள்.

கட்டிய வீடு காலப் பழமையினால் ஒட்டி உறைவதற்குத் தகுதி அற்றதாகிவிட்டாலும் அதனால் அதனை விட்டு விலகி ஓடி வெளியே சென்று ஒதுங்கமாட்டார்கள்; அந்த வீட்டிலேயே ஒரு மூலை கிடைக்காமல் போகாது; ஒதுங்கி இருந்து வாழ்க்கை நடத்த முடியும்; என்னதான் இடிந்து பழுதுபட்டாலும் அது முற்றிலும் ஒதுக்கக்கூடியது என்று கூற முடியாது. நற்குடிப் பிறந்தவர் வறுமையால் நொடிந்துவிட்டாலும் அவர்கள் வெறுமையில் மடிந்து போகமாட்டார்கள். தம்