பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

75


மாட்டார்கள். அதே சமயம் சில தவறுகள் நிகழ்ந்து விட்டால் அது அந்தக் குடும்பத்துக்குத் தகாது என்று பழி துற்றுவர்; இழித்துப் பேசுவர். நல்லதுக்குப் புகழ்ச்சி இல்லை; தவறுகள் நடந்துவிட்டால் அதை மிகைப் படுத்திப் பேசுவர். உலகம் அப்படித்தான். நிலவு தரும் சந்திரன் அதன் ஒளியைப் புகழ்ந்து பேசுவதைவிட அதில் உள்ள களங்கத்தைத்தான் கவிஞர்கள் சுட்டிக் காட்டுவர். பதவிகள் வகிப்பவர் நூறு நன்மைகள் செய்தாலும் ஒரு தீமை செய்துவிட்டால் அவர்களை உலகம் பழித்துக் கூறும்; அந்தப் பதவிக்கு அவர்கள் தகுதி இல்லை என்று கூறிவிடும். முகவரி இல்லாத முனியன் தவறு செய்தால் அதைச் ‘சனியன்’ தெரியாது செய்துவிட்டான் என்று ஒதுக்கி விடுவர்! தனிப்பட்டவர் தவறுகள் மன்னிக்கப்படும்; தகுதி மிக்க பதவிகளில் இருப்பவர் மிகுதிகள் செய்துவிட்டால் உலகம் ஒப்புக் கொள்ளாது; எனவே குடிப்பெருமை உடையவர் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டிய நிர்பந்தம் உள்ளது என்பதை அறிக.

மாட்சி மிக்க குடியில் பிறந்தவரிடம் சில நற்செயல்களை மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த வீட்டுப் பிள்ளை படிக்காமல் திரிந்தால் மற்றவர்கள் துடித்துப் போவார்கள்; கடிந்து பேசுவார்கள். நயன்மிக்க செயல்களைச் செய்யாமல் கயமை மிக்க கீழ்த்தரமான செயல்களில் இறங்கிவிட்டால் அவற்றைச் சுட்டிக் காட்டாமல் இருக்க மாட்டார்கள். “கெட்டுக் குட்டிச்சுவர் ஆகிறானே” என்று திட்டிக்கொண்டு இருப்பார்கள்; பேசும் சொற்களில் கூசும் இழி சொற்கள் கலந்து விட்டால் அவன் நாசம் அடைந்துவிட்டதாக மற்றவர்கள்