பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


துவேஷிப்பார்கள். “இவன் வாயில் இந்த மாதிரி சொற்கள் வருவது தகாது என்பர்”. ‘சேரிடமறியாமல் சேர்ந்து ‘சேரி’ மொழி அவனிடம் ஏறிவிட்டது” என்று வருந்துவார்கள். கேட்டு இல்லை என்றால் அந்தக் குடும்பத்தைப் பழித்துப் பேசுவார்கள். அவன் வைத்துக் கொண்டே இல்லை என்று சொல்லுவதாகக் கூறுவார்கள். ‘போகும்போது இவன் என்ன எடுத்துக் கெண்டு போகப் போகிறான்?’ என்று ஆராய்ச்சியில் இறங்கிவிடுவார்கள். “யாருக்கு வைத்துவிட்டுப் போகப் போகிறான்” என்று கேட்பார் “பிள்ளையா குட்டியா இவனுக்கு என்ன கேடு?” என்று அவன் சொந்த வாழ்க்கையைத் தேடி உண்மை காண முயல்வார்கள். மாண்குடிப் பிறந்தவர்க்கு இப்பழிச் சொற்கள் வந்து சேரும். அக்குதொக்கு இல்லாமல் யாரோ எவரோ எதுவும் பேசமாட்டார்கள். அவன் தனிக்காட்டு அரசன், கடலில் மரக்கலத்தில் செல்லும் வலைஞன்; அவன் உண்டு; அவன் கை வலை உண்டு; யார் அவனைப் பற்றி விமரிசிப்பார்கள்? நாலு பேர் நடுவே வாழும் மனிதர்கள் நற்பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது.

“ஏன்’யா? உன்னை யார் அடித்தது? எதற்காக ஊர் வம்பு?” என்று கேட்பாரும் உளர். “அது எப்படி ஒதுங்கி வாழ முடியும்? என் குடிப் பெருமைக்கு ஒவ்வாது” என்று விடை கூறுவர். “நம்மவர்களுக்கு நாம் செய்யாவிட்டால் பின் யார் செய்வார்கள்? இனி நன்மை அதைக் கருதித்தான் ஆக வேண்டும்” என்பர்; வாய் திறந்து வணக்கம் என்று சொல்லாமல் தன் வழி பார்த்து விழி வைப்பாரும் உளர். “வணக்கம் என்று