பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

79




16. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
(மேன் மக்கள்)

அழகிய வானத்தில் விளங்கி ஒளிவீசும் நிலவும், இளகிய மனமுடைய சான்றோரும் உலகுக்கு ஒளி தருவதில் ஒப்புமை பெறுவர். மாசு மறுவற்றது திங்கள் என்று கூற இயலாது; அதற்குக் களங்கம் உண்டு என்று அதன்கண் துளங்கு இருளால் உலகம் சாற்றுகிறது. அந்தச் சிறுமாசும் தமக்கு ஏற்பட்டால் மேன்மக்கள் தாங்கிக் கொள்ளமாட்டார்கள். தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வர்; செயலாலும் நினைப்பாலும் தீமை கருதமாட்டார்கள். பழி விளைவிக்கும் வழிகளில் விழிகள் நாட்டம் செலுத்தமாட்டார்கள். இவ்வகையில் நிலவைவிட நிறைகுணம் படைத்த சான்றோர் மேன்மை மிக்கவர் ஆவர்.

நல்லது தீயது இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தே ஒரு காரியத்தில் இறங்குவர் மேன் மக்கள்; உள்ளுவது எல்லாம் உயர்வையே நினைப்பர். “காட்டு முயலை வேட்டையாடி அதைப் பிடித்துக் கொண்டு வந்து குறி தப்பவில்லை என்று அறிவித்தால் யாரும் அவனைப் பாராட்டமாட்டார்கள். யானையைக் குறி வைத்து அம்பு எய்து அது தப்பினாலும் அவரைப் பாராட்டுவர்” என்பார் வள்ளுவர்; நரியைக் குறி வைப்பதை விடக் கரியைக் குறி வைப்பதே பெருமை தருவதாகும். கரி என்பது கருப்பு நிறத்தை உடைய யானை; பிறர்