பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


தவறுகளைக் கண்டு அறையலாம் போலத் தோன்றலாம்; என்றாலும் அவனை அதற்காக மேன்மக்கள் வருத்த மாட்டார்கள். மற்றவர்கள் அவர்களை இகழக் கூடுமே என்று அவர்களுக்காக இரக்கம் காட்டுவர். பெரியோர் என்பவர் சிறியோர் செய்யும் பிழைகளைப் பொறுப்பது அவர்தம் கடமை ஆகக் கொள்வர். அதுவே அவர்களுக்குப் பெருமை தருவதாகும்.

கரும்பு கடித்தாலும் சுவைக்கும். பிழிந்து பருகினாலும் சுவைக்கும். அதனைச் சாறாகப் பிழிய நூறாகத் துண்டித்தாலும் அது தன் இன்சுவையில் சிறிதும் குறையாது. மேன் மக்களை நீ திட்டு; பேசு, வாட்டு அவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். “அஃது அவன் கருத்து, அதைப் பற்றிக் கவலை கொள்வது தவறு; நமக்கு நாம் உயர்ந்தவர்கள் என்று மதித்துக் கொள்ள உரிமை உண்டு; அந்த மதிப்பீடுகளை அவன் உதைத்துத் தள்ளலாம்; அதற்காக நாம் நம் மனப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்பது இல்லை என்பர். அப்பொழுதும் மேன்மக்கள் எதிரிகளுக்கும் தம்மாலான நன்மைகளைச் செய்து கொண்டேதான் இருப்பர்.

மேன்மக்கள் என்று சொல்லிக் கொள்ள அவர்களிடம் என்ன தகுதிகள் இருக்கின்றன? அவர்களிடம் எதிர்பார்க்கும் நற்பண்புகளை நவில இயலுமா? ‘களவு’ என்பது அவர்களிடம் காண முடியாது; மறைவாகப் பிறர் பொருளைக் கவ்வுதல் என்ற நினைவு தோன்றாது. அகப்பட்டவரையில் சுருட்டிக் கொள்வது என்ற ஆக்கிரமிப்பு அவர்களிடம் இருக்காது. ‘குடி’ அந்தப் பேச்சே அங்கே பேசக்கூடாது; கீழ் மக்கள் தாழ்