பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

81


மதுக்களைப் பருகி மகிழ்வர்; உயர் மட்டம் அவர்களுள்ளும் குடிப்பார் உளர்; கொஞ்சம் பணம் கை வந்து விட்டாலே பான வகைகள் வந்து சேர்ந்துவிடுகின்றன. ‘வசதி இருக்கிறது குடிக்கிறேன்; அதனால் என்ன தவறு’ என்று வினவுவர். கொலு பொம்மைபோல் நிற்பது வாழ்க்கை அன்று; வாழ்க்கை அனுபவிப்பதற்கு என்று சித்தாந்தம் பேசுவர். வெளிநாட்டுச் சரக்கு அவற்றை அவர்கள் உள்ளே இறக்குமதி செய்து பெருமைப்படுத்துகிறார்கள். இவர்கள் பணக்காரர்கள் ஆவர். பண்பாளர் அன்று; மேன்மக்கள் எந்த வகை மயக்கம் தரும் குடி வகைகளையும் தொடமாட்டார்கள். புகை பிடிப்பதையும், வரைவு இல்லாமல் மகளிரை நாடுதல் முதலிய தீய பழக்கங்களையும் அவர்களிடம் காண முடியாது. பிறரை மனமறிந்து எள்ளிப் பேசமாட்டார்கள்; இகழ்ந்து உரைத்தலால் புகழ் அமையாது என்பதை நன்கு அறிவர். எந்த நிலையிலும் வாய் பொய் பேசாது. வாய் என்றாலே வாய்மை என்பதை உணர்ந்தவர். வாய் என்ற பெயரே அது பொய் பேசாது என்பதைக் காட்டுகிறது. வாய்மை ‘பொய்’ பேசாது இது சொல் விளக்கம்; அதற்குப் ‘பொய்’ என்று யாரும் பெயரிடவில்லை. மனம், வாக்கு, செயல் இம்மூன்றிலும் மாசு மறுவற்றவராய்த் திகழ்வர்; நிலை மாறினாலும் தம் உளம் மாறாத உத்தமர்கள் அவர்கள் தம் நிலையில் வாழ்ந்து எதையும் தாங்கும் மன இயல்போடு வாழ்வர். இவை எல்லாம் மேன்மக்களின் நற்குணங்கள்; செயல்கள் ஆகும்.

இதுதான் அறநெறி என்று எடுத்துரைக்கத் தேவை இல்லை; இந்த மூன்று நன்னெறிகளை ஒருவன் பின்பற்றினால் அதுபோதும். அவனை உயர்த்துவதற்கு;

6