பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



சான்றோர் உறவு அத்தகையது அன்று; உடனே கேட்ட அந்த அளவே விரும்பியது கிடைக்ககும் என்று கூற முடியாது. அது தங்கச் சுரங்கம்; உள்ளே பொதிந்து கிடக்கின்றன. நிரந்தரமாக நன்மை செய்வர். அவர்கள் நன்மைகள் கண்ணுக்குப் புலப்படா; ஆனால் தொடர்ந்து துயர் தீர்ப்பர்; மேன்மக்கள் தொடர்பு நிலைத்தது; தொடர்ந்து உதவுவது; பயன் உடையது நம்பியவரை அவர்கள் என்றும் கைவிடமாட்டார்கள்.


17. பெரியவர்களை மதிக்கக் கற்றுக் கொள்
(பெரியாரைப் பிழையாமை)

குணம் என்னும் குன்று ஏறி நின்றவர்கள் பெரியவர்கள்; அவர்களை அவமதித்தால் அவர்களை அடக்கி வைக்க முடியாது; ‘சாது மருண்டால் காடு கொள்ளாது’ என்பது பழமொழி. சாது என்பது இந்தச் சான்றோர்களைத் தான் குறிக்கும். ‘என்ன சொன்னாலும் இவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்’ என்று தப்புக் கணக்குபோடக் கூடாது. அவர்கள் வெறுக்கத்தக்க அளவு அவமதிக்கத் தொடங்கினால் அது திருப்பி அடிக்கும். அவர்கள் சீறிப் பொங்கினால் உன் நிலை மாறி விடும். ஆறி அடங்குவார்கள் என்று எதிர்பார்க்காதே. பொன்னைப் பெற்றாலும் பெற முடியும். பெரியோர்களின் நன்மதிப்பைப் பெறுவது எளிது அன்று. அவர்களை நல்ல வகையில் பயன்படுத்திக் கொண்டு நன்மைகள் பெறலாம். அவர்கள் செயற்கரிய