பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

85


செய்யும் இயல்பினர்; பல நற்காரியங்களை அவர்களைக் கொண்டு சாதித்துக் கொள்ளலாம். அவர் தெரியும் இவர் தெரியும் என்று பறை அறைந்து கொண்டிருந்தால் என்ன நிறைவு அடைய முடியும். கற்ற பெரியவர்களிடம் பல நற்செய்திகளை அறிந்து கொள்ளலாம். உற்ற செல்வர்களாக இருந்தால் பொருள் உதவி பெற்று முன்னேறலாம். பதவியில் மேலோர் ஆயினும் சலுகைகள் பெற்று உயர இயலும்; கல்வி, சால்பு, செல்வம், பதவி மதிப்பு, உயர் நிலை இவை உள்ளவர்கள் பெரியவர்கள்; நம்மை விட வயதிலும் பெரியவர்கள்; அவர்களை மதித்தால் நீ உயர முடியும்.

பெரியோர்கள் அறிவு உடையவர்கள்; அவர்களைப் போற்றியோ தூற்றியோ ஏமாற்றிவிட முடியாது; இவற்றால் அவர்கள் மகிழ்வது இல்லை; கசிவதும் இல்லை; அசைவதும் இல்லை; இழிந்தவர் பழித்தும் அழித்தும் பேசி அவர்கள் மதிப்பைக் குறைக்க முயல்வர்; அவற்றை அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. எது உண்மை? எது பொய்மை? எது நன்மை? எது தீமை என்று நுட்பமாக அறிந்து கொள்ளும் இயல்பினர் அவர்கள்; அவர்களிடம் நன்மை பாராட்டினால் சீர்மை பெறமுடியும். சிறப்பு அடைய முடியும்.

நஞ்சு உடைய நாகம் கொடிது; அதைக் கண்டு மற்றவர்கள் அஞ்சுவர். அது மலைக் கல்லில் பதுங்கி மறைந்து இருந்தாலும் இடி இடித்தால் ஒதுங்கி அஞ்சும் இயல்புடையது. நடுங்கும்; ஒடுங்கும்; தீயவர்கள் “தம்மைப் பெரியவர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். அவர்கள் அப்பாவிகள்; என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு இருப்பர்” என்று எதிர்பார்த்தால் அது பேதமை