பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

87


வேண்டும். பெரியவர்களும் அத்தகை யவரே. “அவரை நாம் ஏன் மதிக்க வேண்டும்?” “வயது மிக்கவர்கள்; வாலிபம் இழந்தவர்; நரை திரை இவற்றால் நலிவுற்றவர்கள்; கோல் கண்ணாகக் கொண்டு நடைபோடுகிற்வர்கள்” என்ற எடை போட்டு “இந்தக் கிழங்கள் முதிர்ந்த பழங்கள். இவர்கள் நமக்குச் சுமை; இவர்கள் உறவு நமக்குத் தேவை இல்லை” என்று ஒதுங்கி வாழும் இளைய தலைமுறை பல நன்மைகளை இழந்து விடுகின்றனர். அனுபவமும் அறிவும் சான்ற அப்பெரியவர்கள் விலை மதிப்பற்ற செல்வம். இவர்களைப் புறக்கணித்து ஒதுக்கினால் முன்னுக்கு வர முடியாது; ஆண்டியாகவும் அழகிகளை அனுபவிக்க இயலாத அலிகளாவும் தான் வாழ வேண்டி வரும்.

நூல் பல கற்ற ஞான நன்னெறி உடைய பெரியோர்களிடம் கொள்ளும் தொடர்பு தூயது; ஏனைய முரடர்களிடம் கொள்ளும் உறவு தீயது; முரடர்கள் அவர்கள் திருடர்கள்; உன் உழைப்பை வருடிக்கொண்டு சமயம் வரும்போது இடறி விழச் செய்வர்; விட்டுப் பிரிந்தால் சுட்டும் கொன்று விடுவர். சேரிடம் அறிந்து சேர்க; நல்லவர் சேர்க்கை நன்மை தரும்; பிடிக்காவிட்டால் விலகிவிடலாம். தீயவரை விட்டு விலக முடியாது; விலகவிடமாட்டார்கள். ஆப்பு முளையில் அகப்பட்ட குரங்கின் கதையாகத்தான் முடியும்.

ஏடு எடுத்து ஏதாவது படித்துக் கொண்டிருந்தால் அஃது உனக்குப் பீடும் பெருமையும் தருகிறது. நாடிய கல்வி கை கூடுகிறது. நூல் எடுத்துப் பிரித்துப் பார்க்காத அந்த நாள் வீணாளாகும். பத்திரிகை படிக்காவிட்டால் உன் சுற்றுப்புறம் அறியமாட்டாய்; நூல்களைக் கற்றுக்