பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


கொண்டே இரு; புரட்டிக்கொண்டே இரு; திரட்டிக் கொண்டே இரு கல்வி ஞானம். அது பயன் உடையது. அதே போலப் பெரியவர்களைச் சாராத நாளும் வீணானதே; பெரிய இழப்பு என்றுதான் கூறமுடியும்; நம்மால் இயன்றது பிறர்க்குக் கொடுக்காமல் கழிந்த நாளும் பயனற்றதாகும். பண்புமிக்கவர்கள் இந்த மூன்று நல்ல பழக்கங்களையும் விடமாட்டார்கள். நாளும் ஏடுகளைப் படித்தல், பெரியவர்களைச் சந்தித்துப் பழகுதல், வறியவர்க்கு ஏதாவது ஈதல் இம்மூன்றும் பண்புமிக்க செயல்கள் ஆகும்.

சிலர் பண்பால் உயர்வு பெற்றவர் ஆவர்; ஞானத்தால் உயர்ந்தவர் ஆவர். அவர்கள் பெருமை மிக்கவர்; என்றாலும் பெருமை சிறுமை பாராட்டாமல் தம்மை அடையும் இளைஞர்களை ஆதரிப்பது, அறிவு கூறுவது, அன்பு காட்டுவது அவர்தம் கடமையாகும். சிலர் செல்வத்தால் செழிப்பு உடையவர் ஆவர். அவர்கள் ஏழை எளியவரிடத்துப் பழகி அவர்களைக் களிப்புறச் செய்தால் அவர்களும் மதிக்கத் தக்கவர் ஆவர்.


18. சேர் இடம் அறிந்து சேர்க
(நல்லினம் சேர்தல்)

அறியாப் பருவத்தில் இருந்து ஊர் முரட்டுக் காளைகளுடன் பழகிப் பாழாகிப் போன சிறுவர்கள் கூடத் திருந்த முடியும்; புல் நுனிமேல் தங்கும் பனித்துளி காய் கதிர்ச் செல்வன் கரம்பட்டதும் மறைந்துவிடுகிறது.