பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


கின்றனர். எதுவும் நிலைப்பது இல்லை, நம் கட்டுக்குள் அடங்குவது இல்லை; இவ்வளவும் தெரிந்தும் அதே சேற்றில்தான் உழல்கிறோமே தவிரக் காற்று வாங்கிச் சுகப்பட விரும்புவதில்லை. வெட்ட வெளிதனை மெய் என்று கருதித் தூய வெளிச்சம், காற்று இவற்றையும் சுவாசிக்க முயற்சி செய்வோமாக, மேலான பொருள்களைப் பற்றியும் சிந்தித்து உண்மை காண்போமாக.

வாழ்க்கை ஒரு தொடர்கதை; எங்கேயும் முடிக்க முடிவது போல அமைவது இல்லை. ஏதாவது ஒரு புதிய பிரச்சனை உருவாகிக் கொண்டுதான் வருகின்றது. இளைஞன் “மணமாகிவிட்டால் எல்லாம் சரியாகிப் போய்விடும்; எந்தக் குறையும் இருக்காது. கைப்பிடித்தவள் பானை பிடிப்பாள், அவள் வந்த பாக்கியம் எல்லாம் சிலாக்கியமாக முடியும்” என்று கனவு காண்கின்றான். வந்தபின் எத்தனை போராட்டங்கள்? அமைதி எங்கே? எந்த மூலை முடுக்குகளில் தேடிப்பார்க்கிலும் கிடைக்கவில்லை. புதிதாக வந்தவள் இந்தக் குடும்பத்துப் பிரஜை களை நேசிப்பது இல்லை; பெற்ற தாயும் தந்தையும் அந்நியப்படுத்தப்படுகின்றனர் பின்பு குழந்தைகள் படிப்பு: அவர்களை நிலைநிறுத்துவது; அப்பப்பா முடிவே இல்லை. இவற்றைக் கண்டு மயங்கி இதுதான் இன்ப சுகம் என்று ஆழ்ந்துவிடாதே. இதைவிட மேலான இன்ப சுகம் இல்லை என்று ஆழ்ந்துவிடாதே. இதைவிட மேலான வாழ்வு அமைத்துக் கொள்ள முடியும். சிந்தித்துப்பார். அறிவு உலகம் அழைக்கிறது. மெய்ப்பொருள் காண முயல்க.


மழை பெய்கிறது; பருக நீராக அமைகிறது. ஆனால் மழை எப்பொழுதும் பெய்துகொண்டே