பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

95


இருப்பது இல்லை; கிணற்று நீர் ஊற்றுகள் இருந்து சுரந்து கொண்டே இருக்கிறது. அதுபோல மேன்மக்கள் வருவாய் குறைந்துவிட்டாலும் தாம் சேர்த்து வைத்து செல்வம் கொண்டு பிறர்க்கு உதவிக்கொண்டே இருப்பர். அவர்கள் நன்மை செய்வதிலிருந்து பின்வாங்குவது இல்லை. கீழ்மக்கள் தாழ்நிலையில் இருந்தே செயல்படுவர். செல்வம் மிக்கு இருந்தாலும் பிறர் அல்லல் தீர்க்க முன்வர மாட்டார்கள். பேருண்மை கண்டு பெருமிதத் தோடு வாழ்வதே வாழ்க்கையாகும். உள்ளம் உயர்ந்து பிறர் துன்பத்தைக் குறைக்க முயல்வதே வாழ்வின் மெய்ம்மையாகும்; மெய்யறிவு என்பதும் அதுவே ஆகும்.

ஆற்றுப் பெருக்கு நீர்ப்பெருக்கால் நிலம் செழிக்கச் செய்து பயிர் வளர்க்கும்; உணவு பெருக வழி செய்கிறது. மக்கள் உயிர் வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குகிறது. மழை இன்மையால் நீர்ப் பெருக்கு இல்லாவிட்டாலும் ஊற்றுநீர்க் கொண்டு மக்கள் நீர் வேட்கையைத் தீர்க்கிறது; குடிக்க நீராகிறது. மேன்மக்கள் இருக்கும் காலத்தில் வாரி இறைப்பர்; இல்லாத காலத்தும் உதவிக் கொண்டே இருப்பர். பசையற்ற நெஞ்சோடு அவர்கள் வாழ்வது இல்லை. உயிர்களிடத்து நசைவுற்ற வாஞ்சையோடு வாழ்வர்; மக்களை எப்பொழுதும் நேசிப்பர்; இதுவும் வாழ்வின் மெய்ம்மையாகும்.

வெள்ளெருதுமேல் சூடுபோட்டால் அது பளிச்சென்று பலர் கண்ணிலும் படும்; “பாவிகள் எருதுக்குச் சூடு போட்டுவிட்டார்களே” என்று பழி பேசுவர். சான்றோர் சிறு தவறு செய்தாலும் அதைப்