பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


பறை சாற்றி இகழ்வர்; பெரிதுபடுத்துப் பேசுவர். அதுவே கீழ்மக்கள் எருதைக் கொன்று புசித்துவிடுவர். யாரும் அதைப்பற்றி ஏதும் எடுத்துப் பேசமாட்டார்கள். வெளுத்த துணிமேல் கறை பளிச்சென்று காட்டிவிடும். அதனால் சான்றோர் தவறு செய்வது தவிர்ப்பது நல்லது.

நகைச் சுவை என்பது மென்மையானது. நுட்பமானது; அதைச் சுவைக்க மனஇயல்பு நன்றாக இருக்க வேண்டும். எள்ளிப் பேசுவது மனத்துள்ளலால் விளைவது; பிறரை மகிழ்விப்பது; ரசனையே இல்லாத மண்டுகளிடம் சிரிப்புவரப் பேச முயன்றால் அவர்கள் தம்மை இழிவுபடுத்துவதற்காகவே இவ்வாறு பேசிவிட்டார் என்று சீற்றம் காட்டுவார். அறிவு நிரம்பிய சான்றோர் சலனமற்று வாழ்வர்; அவர்களிடம் குத்தலாகப் பேசினாலும் அவர்கள் குறையாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்; பெருமை பெருமைதான்; சிறுமை சிறுமைதான்.

யாரிடம் எப்படிப் பேசவேண்டும்? எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். புதிதாக மணந்து கொண்டவளிடம் அவள் மகிழப் பேசவேண்டும். “உன் முக்கு என்ன சப்பையாக இருக்கிறதே; நெற்றி மேடாக இருக்கிறதே” என்று விவரித்தால் அவள் உன்னைக் கேடாக நினைப்பாள். “அதி சுந்தரி நீ; வனிதாமணி” என்றால் அவள் உன் உறவுக்கு உடனே படிவாள்; தடித்தனமாக அவளிடம் நடந்துகொள்ளக் கூடாது.

பயில்வானிடம் சண்டைபோடச் செல்கிறாய்; அங்கே அவனிடம் மெல்ல வருடிக் கொண்டு இருக்க முடியாது; தூக்கி எறிய முனையவேண்டும்; முள்ளை