பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

97


முள்ளால்தான் எடுக்க வேண்டும். வஞ்சகரை நயமாகப் பேசி அவர்களை வெற்றி கொள்ள வேண்டும். நல்லவர்களிடம் நன்மை தோன்ற நடந்து கொள்ள வேண்டும். எங்கே யாரிடம் பேசுகிறோம் என்பது அறிந்து பேசுவது வாழ்க்கையில் வெற்றி தரும்.

முடுக்கிக் கசப்பான வார்த்தைகளைச் சொல்லி இடுக்கிவிட விரும்புகிறான் ஒருவன். கோள் சொல்லி நல்லவனாக நடிக்க விரும்புகிறான். இல்லாதது பொல்லாதது சேர்த்துக் கூட்டிப் பேசுகிறான். நமக்கு நன்மை செய்வது போல் காட்டி அவன் நம் நண்பர்களைப் பிரித்து வைக்க முற்படுவான். அப்பொழுது தலை அசைக்கலாம். ஆனால் நிலைகெடக் கூடாது; ஒளிவிடும் விளக்குப் போல் தம் நிலைமாறாமல் அவன் கூறுவதை எடுத்துக்கொள்ளாமல் அவனை அனுப்பிவிடுவதே தக்கது ஆகும். யார் எது சொன்னாலும் சீர்தூக்கி ஆராய்வது பெருமை தரும்.

உண்பதற்கு முன் அவர்கள் கண் நான்கு பக்கம் பார்க்க வேண்டும். முதற்பிடியை மற்றவர்க்கு என்று எடுத்து வைத்துவிட்டு மற்றபடி உண்ணத் தொடங்க வேண்டும். பிறர் பசித்திருக்கத் தான் உண்பவன் நற்கதியைச் சாரான்; அவன் மனம் அழுக்குப் படிந்ததாக விளங்கும். மனம் மாசு பெற்று மங்கிவிடுவான்.