பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 10

187, இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்

பசைந்த துணையும், பரிவாம்;-அசைந்த நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண் பகையேயும் பாடு பெறும்.

சிறுமையான குணங்களே பொருந்திய, நல்ல இயல்பே இல்லாதவர்களிடத்திலே சிநேகித்த அளவு அத்துணைக்கும் துன்பமேயாகும். நிலை தடுமாறிய தீய செயல்களை விளையாட்டாகவும் செய்யவிரும்பாத நல்ல அறிவுடையவர் களிடத்திலே கொண்ட பகைமையுங்கூடப் பெருமையைத் தருவதாகும்.

கீழோர், நண்பர்க்கும் தீங்கிழைக்கும் பண்பு கொண்டவர்கள் அறிவுடையவரோ, பகைமையையும் பொறுக்கும் இயல்பினர். அதனால், அவர்கள் தொடர்பே பெருமைதரும் என்பது கூறப்பட்டது.

188. மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்து

ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை; எல்லாம் சலவருட் சாலச் சலமே, நலவருள் நன்மை, வரம்பாய் விடல்

மென்மையான தன்மைகளையுடைய பெண்களிடத்திலே நாம் மென்மைத் தன்மை உடையவர்களாகவே நடந்து கொள்ளல் வேண்டும். வலிமைமிகுந்த பகைவரிடையே செல்லும்போது, அந்த மென்மைத் தன்மையைக் கைவிட்டு விட்டு, எமனும் அஞ்சும்படியான பயங்கரத்தன்மை உடையவர் களாகவே நாமும் செல்லல் வேண்டும். இப்படியே எல்லாக் காரியங்களிலும் வஞ்சகமாகப் பேசுபவர்களிடத்திலே வஞ்சகமாகப் பேசி அவர்களை வெல்வதற்கும், நற்குண முடையவர்களிடத்திலே நன்மை பொருந்த நடந்து அவர்களின் அன்பைப் பெறுவதற்கும் ஏற்ற தன்மையே, தமது பழக்கத்தின். வரம்பாக அமைந்து இருக்க வேண்டும்.

இப்படி நடப்பதே பெருமை என்பது கருத்து. 189. கடுக்கி, ஒருவன் கடுங்குறளை பேசி

மயக்கி விடினும், மனப்பிரிப்பொன் றின்றித், துளக்கம் இலாதவர், தூய மனத்தார், விளக்கினுள் ஒண்சுடரே போன்று. ஒருவன் தன்னுடைய முகத்தை மிகவும் கடுமையாக வைத்துக்கொண்டு, மற்றொருவன்மீது கடுமையான