பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

புலியூர்க் கேசிகன் - 133 . . .

252. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து,

அல்லல் உழப்பது அறிதிரேல்-தொல்சிறப்பின் நாவின் கிழத்தி உறைதலாற், சேராளே, பூவின் கிழத்தி புலந்து. பல்வேறு வகைப்பட்ட நூற் கேள்விகளினால் வாழ்வின் உண்மைப் பயனை உணர்ந்தவர்களுங்கூடத் தம் தகுதி அழிந்து, செல்வம் இல்லாததன் காரணமாகப் பற்பல துன்பங்களுக்கும் உட்பட்டு உழலுகின்றனர். இதன் காரணத்தை ஆராய்ந்தறிய விரும்புவீர்களானால் சொல்வேன் கேளுங்கள்; பழமையான சிறப்பினையுடைய நாவின் கிழத்தியான கலைமகள் அவர்களிடம் கூடி வசிப்பதனால், பூவின் கிழத்தியான திருமகள் பிணக்கங் கொண்டு, அவர்களிடம் சேரமாட்டாள் என்று அறிவீர்களாக,

கலைமகளுக்குத் தொல்சிறப்புக் கூறியது, ‘ஒருமைக் கண் தான் கற்ற கல்வி எழுமையும் ஏமாப்புடைத்து’ என்பது பற்றி. அதன் பயன் பிற்பிறவிகளிலும் தொடர்ந்து வரும் என்பர். கிழத்தி-உரிமையுடையவள். கல்விச் சுவையிலே தேர்ந்தவர்க்குப் பொருட்பற்றில் மனம் ஈடுபடாமைபற்றி இப்படிக் கூறினார். திருமகள் மாமியும், கலைமகள் மருமகளுமாகப் புராணங் கூறுவதால் அவர்கள் ஒன்றுபட்டு வாழார் என்ற உவமையைக் கூறிக் கருத்து விளக்கப்பட்டது.

253. கல்லென்று தந்தை கழற, அதனையோர்

சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன், மெல்ல எழுத்தோலை பல்லார்முன் நீட்ட, விளியா, வழுக்கோலைக் கொண்டு விடும்.

தந்தை, ‘படி படி!’ என்று சொல்ல, அப்படித் தந்தை சொல்லும் சொல்லைத் தன் வாழ்வுக்கு உறுதியைத் தருகின்ற ஒப்பற்ற சொல்லென்று கொள்ளாமல், தன் இளமைப் பருவத்திலே இகழ்ச்சியாகக் கருதிக் கைவிட்டவன், பலருக்கும் எதிரில், எழுத்தைக் கொண்டிருக்கும் ஒலையைப் படிப்பாயாக’ என்று மெதுவாக ஒருவர் நீட்டிய காலத்திலே,

உயிரிழந்தவனைப்போல ஆகி, அங்கிருந்து தப்பிப் போய்

விடும்படியான நிலைமையினைக் கொண்டுவிடுவான்.

‘அறிவின்மை உடையவன் பலர் கூடிய அவையின் கண்

இவ்வாறு அவமதிப்பு அடைய நேரும் என்பது கருத்து.

விளிதல்-சாதல், வழுக்கோலை-தப்பிப் போகும் படியான நிலையை.