பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 137 27. நன்றியில் செல்வம்

செல்வத்தின் பயன் அதனை நல்ல வழிகளிலே செலவிட்டு, ஈட்டியதானும், வறுமையால் தன்னைச் சார்ந்த பிறரும், கூடி அனுபவிப்பதேயாகும். செல்வத்தினால் வருகின்ற பயனை அனுபவியாமல் அதனைச் சேர்ப்பதில் மட்டுமே ஒருவன் மனஞ் செலுத்தினான் என்றால், அவன் உண்மையில் இரங்கத் தக்கவனே யாவான்.

செல்வம் நிலையாமை உடையது என்பதை விளக்கி, அதனால் அது உள்ளபோது பலருக்கு உதவி அறம் செய்து வாழ்தல் வேண்டும் என்பது முன்னரே கூறப்பெற்றது. இந்தப் பகுதியில் உதவி செய்யாமல் சேமித்து வைக்கிற செல்வம் எவ்வாறு பயனற்ற செல்வமாகும் என்பது கூறப் பெறுகின்றது.

மேலும், நன்மையான வழிகளிலே செலவிடப்படாத செல்வம் பயனற்றது ஆவதுமட்டுமன்று, அது தீய வழிகளிலே செலவிடப்படுவதனால் தீமை தருவதாகவும் முடியும் என்பதைக் கருதவேண்டும்.

261. அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்

பொரிதாள் விளவினை வாவல் குறுகா; பெரிதணியர் ஆயினும், பீடிலார் செல்வம் கருதுங் கடப்பாட்ட தன்று.

பொரிந்த அரையினை உடைய விளாமரத்தினை அது மிகுதியான பழங்களை உடையதாகத் தமக்கு மிகவும் அருகாமையிலேயே இருப்பதாயினும், வெளவால்கள் சென்று ஒருபோதும் சேரமாட்டா. அது போலப், பெரிதும் அருகாமையிலேயே இருப்பவராயினும், தகுதியற்றவர்களுடைய செல்வமானது எளியவர்களுக்கு உதவும் என்று நினைக்கும் . முறையினை உடையதன்று.

“விளாமரத்தின் கனி பயனற்றது என்பது கருத்தன்று; பிறருக்குப் பயன்படலாம்; ஆனால், வெளவாலுக்குப் பயன்படாது, அதுபோலப் பீடிலார் செல்வமும், எளியோர்க்குப் பயன்படாது தீயோர்க்கே பயன்படும் என்பது கருத்து.

262. அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்

கள்ளிமேற் கைநீட்டார், குடும்பூ அன்மையால்;