பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - நாலடியார்-தெளிவுரை

‘மணமுள்ள பூவிலிருக்கும் நறுமணமில்லாத புறவிதழ் போல், நீயும் மலர்மேலிருந்தும் நறுங்குணம் அற்றவளாயினை எனத் திருமகளைப் பழித்தனர். வறுமையால் வாடிய அறிஞன், இப்படிச் செல்வத்திற்கு அதிதேவதை எனப்படும் திருமகளைப் பழிக்கிறான் என்க:


267. நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ?

பயவார்கண் செல்வம் பரம்பப் பயின்கொல்? வியவாய்காண், வேற்கண்ணாய்? இவ்விரண்டும் ஆங்கே நயவாது நிற்கும் நிலை. வேல்போன்ற கண்களை உடையவளே! உதவுகின்ற குணமுடையவர்களிடத்திலே உள்ள வறுமையானது வெட்கம் இல்லாததோ? ஒருவருக்கும் உதவாதவரிடத்து உள்ள செல்வம், அவரை விட்டு விடாமல் பரவுவதற்கு ஏற்ற பிசினோ? இவ்விரண்டும், அவ்விடங்களிலே நன்மைப் படாமல் நிலை பெற்றிருக்கின்ற நிலைமையை, நீ வியப்புடன் காண்பாயாக.

பரம்புதல்-நாற்புறமும் ஒட்டுமாறு பரவுதல். பயின் பிசின். ‘செல்வத்தின் பொருந்தாது கூடியிருக்கும் தன்மை’ உரைக்கப்பட்டது.

268. வலவைகள் அல்லாதார், காலாறு சென்று,

கலவைகள் உண்டு, கழிப்பர், -வலவைகள்

காலாறுஞ் செல்லார், கருணையால் துய்ப்பவே, மேலாறு பாய, விருந்து.

பேய்த்தன்மையினை உடையவர்களாக இல்லாத நல்லவர்கள் தங்கள் கால் சென்ற வழியெல்லாம் நெடுந் தொலைவினைக் கடந்து சென்று அங்கங்கே கிடைத்த கலவை யான உணவுகளை உண்டு, தம் வாழ்நாளைக் கழிப்பார்கள். ஆனால் பேய்த்தன்மை உடையவர்களோ, கால்போகும் வழியும் போகமாட்டார்கள்; தம் இடத்திலேயே இருந்து, பாலாறும் நெய்யாறும் பாயும்படியாகப் பொறிக்கறியோடுங் கூடிய உணவினை உண்பார்கள். செல்வத்தின் தன்மை இதுதான்!

இப்படித் தகாதவரிடம் அமைவது நன்றியில் செல்வம் என்பது கருத்து. கலவை-பலரிடம் சிறிது சிறிதாகப் பெற்றதாற் கலவையான சோறு.

269. பொன்னிறச் செந்நெற் பொதியோடு பீள்வாட,

மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்றுகுக்கும்