பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 142 - - - நாலடியார்-தெளிவுரை

உள்ளமே நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து, நன்மையென உணர்ந்தவிடத்து இன்பமும், தீமையென உணர்ந்தவிடத்துத் துன்பமும் அநுபவிப்பதாதலால், மேற்கண்ட உண்மை, அவரவர் உள்ளத்து விளங்கும் காரிய காரணங்களின் தராதரங் களைப் பகுத்தறியும் தன்மையைப் பொறுத்ததாகவே அமையும்.

ஈயாமை, இன்மை, மானம், இரவச்சம் போன்றவை சான்றோர்களின் உள்ளத்திலே மிகுந்த துன்பத்தைத் தருவனவாம். அவை பற்றிக் கூறுவது இந்தப் பகுதி.

28. FFum 6)ud

‘ஈதலே அறங்களுள் எல்லாம் மிகவும் சிறப்புடையதாகத் கொள்ளப்படும். ஈதலினும், வறியார்க்கு ஒன்று ஈதலே மிக்க சிறப்பாகும்.

வறியவரான ஒருவர் வந்து தம்மை இரந்துநின்ற காலத்திலே அவருக்கு உதவ முடியாத நிலையிலே தாம் இருந்தனர் என்றால் சான்றோர் அதற்காக மிகவும் மனம் வருந்தித் துயரப்படுவார்கள்.

கீழ்மக்களோ, இருந்தும் ஈதலிலே மனம் ஈடுபடாத வர்களாக, வறியவர்க்கு ஏதும் தராமலே அவரைப் போக்கி விடுவர். அதனால், இரந்து வந்த எளியோரின் உள்ளம் பெரிதும் புண்படும். அப்படி மறுத்தவரும், மறுமையிலே அளவற்ற துன்பத்திற்கு ஆளாவர்.

ஈயாமை பற்றிய இப்பகுதியினை இனிக் காண்போம்.

271. நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்

அட்டது பாத்துண்டல், அட்டுண்டல், அட்டது அடைந்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு அடைக்குமாம், ஆண்டைக் கதவு. நண்பர்களுக்கும், நட்புச் செய்யாத அயலார்களுக்கும், தம்மிடத்தே உள்ள அளவினாலே சமைத்ததைப் பகுத்துக் கொடுத்து உண்பதே முறையாகச் சமைத்து உண்பதாகும். அப்படியின்றிச் சமைத்ததைக் கதவை அடைத்துத் தனியே இருந்து, தாம் மட்டுமே உண்டு ஒழுகி வருகின்ற நற்குணம் இல்லாத மனிதர்களுக்கு, மேலுலகமாகிய அவ்விடத்துக் கதவும் திறந்திராது, மூடப் பட்டிருக்கும் என்று அறிவாயாக.