பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 நாலடியார்-தெளிவுரை

274. கொடுத்தலும், துய்த்தலும் தேற்றா இடுக்குடை

உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம், இல்லத்து உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால், ஏதிலான் துய்க்கப் படும்.

பிறருக்குக் கொடுத்து உதவுதலையும், தான் அநுபவித்து நுகர்தலையும் அறிந்து செய்யாத உலோபகுணம் பொருந்திய உள்ளத்தை உடையவன் பெற்ற பெருஞ்செல்வமானது, குடியிற் பிறந்த வடிவழகு உடைய கன்னியரைப்போல, அநுபவித்தற்கு உரிய காலம் வந்த பொழுதிலே, அயலானான ஒருவனாலே பெற்று அநுபவிக்கப் படுவதாகும்.

அநுபவியாமலும், ஈத்து உதவாமலும் வைத்திருக்கும் ஒருவனுடைய செல்வத்தைக் காலம் வரும்பொழுது அயலார் பெற்று அநுபவிப்பார் என்பது கருத்து.

275. எறிநீர்ப் பெருங்கடல் எய்தி இருந்தும்,

அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த் துண்பர்; மறுமை அறியாதார் ஆக்கத்திற், சான்றோர் கழிநல் குரவே தலை.

கரையிலே மோதுகின்ற நீரையுடைய பெருங்கடலினை அடுத்ததாக இருந்தாலும், அற்றுப்போம்படியான நீர்ச்சுரப்பினை உடைய சிறுகிணற்று ஊற்றினையே தேடிக்கண்டு அனைவரும் நீர் உண்பார்கள்; ஆதலால், மறுமைப் பயனை அறியாதவர்களுடைய செல்வத்தைக் காட்டிலும், மறுமைப் பயனை அறிந்த சான்றோர்களுடைய மிக்க வறுமையே இவ்வுலகில் மேலானதாகும்.

‘சான்றோர் இயன்ற அளவுக்குக் கரவாது உதவுபவர்; மற்றையோர் உதவார் என்பது தேற்றம். மிக்குப் பெருகியிருக்கும் கடல்நீர் உண்பதற்கு உதவாதாதலினால் அதனை நாடாது, அருகிருக்கும் உண்பதற்குக் தக்க சிறு கிணற்றையே வேட்கை உடையார் நாடுவது போலக், கருமியின் பெருஞ் செல்வத்தைக் கண்டு மயங்கி அவனுடன் உறவுகொள்ளாது வறியவரான நல்லவரின் உறவையே சான்றோர் பேணிக் கொள்வர் என்பது கருத்து.

276. எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை,

‘எனதெனது என்றிருப்பன், யானும், தனதாயின், தானும் அதனை வழங்கான், பயன் துவ்வான்; யானும் அதனை அது.