பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 - நாலடியார்-தெளிவுரை

இரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும் புகற்கரிய பூழை நுழைந்து.

நீரினைக் காட்டினும் நெய்யானது நுண்மையானது.

என்பார்கள். நெய்யினைக் காட்டினும் புகை நுண்மையானது என்பதை யாவருமே அறிவார்கள். ஆராய்ந்து பார்த்தால், இரந்து வாழவேண்டியவனாகிய துன்பமுள்ளவன், அந்தப் புகையும் நுழைந்து செல்லுதற்கரிய தொளையினுள்ளும் புகுந்து செல்பவன் ஆவான்.

இதனால், இரந்து வாழ்கின்ற நிலையினையுடைய வறுமையாளனின் துயரத்தின் எல்லை கூறப்பட்டது. பூழை துவாரம்; தொளை.

283. கல்லோங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால்,

செல்லாவாம், செம்பொறி வண்டினம்; கொல்லைக் கலாஅற் கிளிகடியும் கானக நாட! இலாஅஅர்க்கு இல்லை தமர். தோட்டப்புறங்களிலே கிளிகடியும் குறவர் மகளிர், தம் கவணிலே கற்களைக் கொண்டு கிளிகளை ஒட்டுகின்ற காடுசிறந்த நாட்டிற்கு உரியவனே! கற்கள் வளர்ச்சியுடன் விளங்கும் உயர்ந்த மலையின் மேலே, காந்தளானது மலராமற் போனால், சிவந்த புள்ளிகளையுடைய வண்டினம் அவ்விடத்தை நோக்கி ஒருபோதும் செல்வதில்லை. அதுபோலவே பொருள் இல்லாதவரிடத்திலே உறவு முறையாரும் செல்லாராதலினால், அவர்க்கு உறவினரும் இல்லாமற் போவர் என்று அறிவாயாக.

‘இல்லாதவனை உறவினரும் கைவிடுவர் என்பது கருத்து.

284. உண்டாய போழ்தின், உடைந்துழிக் காகம்போல, தொண்டா யிரவர் தொகுபவே;-வண்டாய்த் திரிதரும் காலத்துத், தீதிலிரோ? என்பார் ஒருவரும் இவ்வுலகத் தில்.

பொருளானது உண்டாயிருக்கின்ற பொழுதிலே,

r \,

உடலானது அழிந்தவிடத்துக் கூடிவரும் காக்கைகளைப் போல ஆயிரக்கணக்கானவர்கள் ஒருவனுக்குத் தொண்டு செய்பவராக வந்து அவன்பாற் கூடுவார்கள். வண்டுகள் மலருள்ள இடங்களைத் தேடித்தேடித் அலைவது போல அவனும் வறுமையால் தனக்கு ஈவாரை நாடிநாடித் திரிகின்ற