பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 151

பறித்துக் கொண்டு போய்ச் சமைத்து, வேறு உண்கலன் இன்மையால் பனையோலைக் குடைகளையே உண்கலமாகக் கொண்டு அவற்றிலே உப்பும் இல்லாமல் வெந்த அந்தக் கீரையைத் தின்று, மனவூக்கங் கெட்டு வாழ்பவராவர்கள் சிலர்.

‘அப்படியேனும் வருந்தி வாழ்வார்களே அல்லாமல், உலோபிகள்பாற் சென்று இரவார் என்பது கருத்து. வறுமைத் துயரத்தின் மிகுதி இதன்கண் கூறப்பெற்றது. இதனால், பொருளின் இன்றியமையாமை உணரப்படும்.

290. ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்

பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவாம்-நீர்த்தருவி தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட! வாழாதார்க் கில்லை, தமர்.

நிறைந்த புள்ளிகளையுடையவும், அழகு விளங்குகின்ற வுமான வண்டின் தொகுதிகள், பூத்து நீங்கின மரக்கிளையின் மேல் ஒருபோதும் செல்லாவாகும். நல்ல தன்மையுள்ள அருவிகள் குறைவுபடாத, உயர்ந்த சிறப்பினையுடைய தண்மையான மலைகளின் வளத்தையுடைய நல்ல நாட்டிற்கு உரியவனே! அதுபோலவே, செல்வம் உடையவராக வாழாதவர்களுக்கு உறவினரும் இல்லாமற் போவர் என்று அறிவாயாக.

‘பொருள் இல்லாதவனுக்கு உறவின்முறை யாரும் வந்து உதவமாட்டார்கள்’ என்பது கருத்து.

30. மானம்

‘மானம்’ என்பது உலகிலே ஒருவர்க்கு நிலவுகின்ற மதிப்பு ஆகும். அதனைச் சிறிதும் குலையாது பேணிக் கொள்ளவும், மென்மேலும் உயர்வுடையதாக்கிக் கொள்ளவும் முயலுதல் வேண்டும். அந்த நிலையினின்று தாழ்வுறுகின்ற நிலைமை எப்போதாவது வருமானால், தம் மானத்தை இழப்பதினும், உயிரையே இழந்து அதனைக் காப்பதையே சிறப்பாகக் கொள்வர், சான்றோர்.

மானம் இழக்கும் நிலைகள் பெரும்பாலும் வறுமையின் காரணமாகவே ஏற்படும். வேறு சிலபல காரணங்களாலும் ஏற்படலாம். எனினும், வறுமையே பெரும்பாலும் மானமிழந்து இரந்துண்ணத் தூண்டும் கொடுமை உடையது. ஆதலால், இது இன்மையின் பின் கூறப்பெற்றது. -

’’.