பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 159

போகும்படியான வறுமைக்காகப் பொருளாசை கவலைப்

படுத்தும் மனத்தினாலே அறிவழிந்து, அயலாரைச் சென்று

யாசித்தல் என்ன காரணத்திற்காகவோ?

‘உள்ளத்தில் உறுதியுடன் இன்ப துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமே அல்லாமல், அயலாரிடம் சென்று இரத்தல் கூடாது’ என்பது கருத்து.

307. என்றும் புதியார் பிறப்பினும், இவ் வுலகத்து,

என்றும் அவனே பிறக்கலான்-குன்றின் பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட! இரப்பாரை எள்ளா மகன்.

மலைகளின் பரந்த இடங்கள் எல்லாம் பொன்னானது ஒடும் படியான, பாய்கின்ற அருவிகளை உடைய நாட்டிற்கு உரியவனே! எக்காலத்தினும் புதிய புதிய மனிதர்கள் பிறந்து கொண்டிருந்தாலும் இவ்வுலகத்தில், என்றும் யாசகரை இகழாத மகனோமீண்டும் வந்து பிறவாதவன் என்று அறிவாயாக.

‘இரப்பவரை இகழாது உதவுபவன், தொடர்ந்து வரும் பிறவித் துயரினின்றும் விடுதலை பெற்று உய்வான்’ என்பது கருத்து.

308. புறத்துத்தன் இன்மை நலிய, அகத்துத்தன்

நல்ஞானம் நீக்கி நிறீஇ, ஒருவனை, ‘ஈயாய் எனக்கு’ என்று, இரப்பானேல், அந்நிலையே மாயானோ, மாற்றி விடின்!

புறமாகிய உடலிலே தன்னுடைய வறுமையானது தன்னை வருத்த, அதனால் தன்னுடைய அகமாகிய நல்ல அறிவினைத் தள்ளி, அறியாமையை நிலைபெறச் செய்து, அயலான் ஒருவனை எனக்கு ஈவாயாக!’ என்று ஒருவன் யாசிப்பானாகில், அந்தச் செல்வன் ‘இல்லை யென்று மறுத்துவிட்டால், அப்படி யாசித்தவன் அவ்விடத்திலேயே இறந்துபோய்விட மாட்டானோ? இரவினால் நேரும் மானக்கேடு கூறி, அதனை அஞ்சி ஒதுக்கும் கடமை வற்புறுத்தப்பட்டது. மாற்றுதல்-மறுத்தல்.

309. ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி,

வழிபடுதல் வல்லுதல் அல்லால், பரிசழிந்து, செய்யீரோ, என்னானும்’ என்னுஞ் சொற்கு இன்னாதே, பையத்தாம் செல்லும் நெறி.