பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 நாலடியார்-தெளிவுரை

ஒழித்தலிலேயே மிகுதியான கவனஞ் செலுத்துதல் வேண்டும் என்பது தெளிவாகும்.

அப்படிப்பட்டஉட்பகைகளுள்,புல்லறிவாண்மை,பேதைம்ை, கீழ்மை, கயமை ஆகியனபற்றிக் கூறுவது இந்த இயல் ஆகும்.

நல்லன தீயனவற்றைப் பகுத்தறிந்து, நல்லனவே கொண்டு, தீயனவெல்லாம் விலக்கி வாழும் வாழ்வின் செப்பத்திற்கு இவை கேடு விளைவிப்பனவாதலால், இவற்றை அனைவரும் அறிந்து போக்குதல் வேண்டும் என்பது தெளிவு.

33. புல்லறிவாண்மை

ஒருவன், தான் சிற்றறிவு உடையவனாக இருந்து கொண்டே மென்மேலும் கல்வியாலும் கேள்வியாலும் அதனை முற்றறிவாக்கிக் கொள்ள நினையாமல், தன் சிற்றறிவுடை மையையே பேரறிவுடைமையாக மதித்துச் செருக்குற்று, உயர்ந்தோர்களின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாது போதலே புல்லறிவாண்மை ஆகும்.

புன்மை+அறிவு=புல்லறிவு; அதாவது சிறுமையான அறிவு. அதனை ஆள்பவர் புல்லறிவாளர்; அதாவது சிற்றறிவினர்.

அவைக்குப் புல்லறிவாளர் உரிமையான தகுதி உடையவர் அல்லர். ஆயினும், அவர் சென்று புகுந்த அந்த அவையின் தன்மையை அறியாது அதிற் பிறர் கலந்து கொள்ளுதலும் புல்லறிவாண்மையே யாகும். இது பற்றியே, அவையறிதலை அடுத்து இந்தப் பகுதி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

321. அருளின் அறமுறைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்

பொருளாகக் கொள்வர் புலவர்; -பொருளல்லா ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை மூழை சுவையுணரா தாங்கு.

பிற உயிர்களிடத்தே தமக்கு இயல்பாக உள்ள அருளின்

காரணமாக அறநெறிகளை எடுத்துச் சொல்லுகின்ற அன்புடை யாளரின் வாய்ச் சொற்களை அறிவுடையோர், தமக்குப் பயன் தரும் மெய்ப்பொருளாகக் கருதி ஏற்றுக்கொள்வார்கள். ஒரு பொருளாகக் கருதப்படுவதற்கும் இல்லாத மூடனோ, பாற்சோற்றின் சுவையை அகப்பை அறியாததுபோல, அதன் பயனை அறிந்து உணரமாட்டாத வனாக, அதனை இகழ்ந்து பேசுவான்.