பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 193

வேசை, வெறுத்துக் கைவிட்டும், அவள்மேல் ஆசைமாறாத தன் மனத்தை நோக்கி ஒருவன் கூறியது இது.

377. ஆமாபோல் நக்கி, அவர்கைப் பொருள் கொண்டு

சேமாபோல் குப்புறுஉம் சில்லைக்கண் அன்பினை ஏமாந்து எமதென் றிருந்தார் பெறுபவே, தாமாம் பலரால் நகை.

முதலிலே இன்பமுண்டாக நக்கிப் பின் உயிரையுண்ணும் இயல்பினையுடைய காட்டுப் பசுவைப் போலத் தம்மிடம் கூடியவர்களது கைப்பொருள் எல்லாம் முதலிலே ஆசைகாட்டிக் கவர்ந்துகொண்டு, பின் எருதைப் போலக் கவிழ்ந்து படுத்துக்கொள்ளுகிற தாழ்ந்த நடத்தையுடைய பொது மகளிடத்திலேயுள்ள அன்பினை, உண்மையென நம்பி இருந்தவர்கள், அவளால் கைவிடப்பட்ட காலத்துப் பலராலும் எள்ளி நகைத்தலுக்கு உள்ளாவார்கள்.

‘வேசையர் தரும் இன்பமெல்லாம், வைப்பொருள் கவர்ந்து கொண்டு பின் கைவிடும் உட்கருத்துடனேயே’ என்பது கருத்து. சேமா-எருதாகிய விலங்கு

378. ஏமாந்த போழ்தின் இனியார் போன்று இன்னாராய்த் தாமார்ந்த போதே தகர்க்கோடாம்-மானோக்கின் தந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே “செந்நெறிச் சேர்தும் என் பார்.

செவ்விய வழியிலே சேர்வோம் என்று சொல்லுகிறவர்கள், தாம் மோகத்தால் மயங்கிப் பொருள் தந்தபோது, இனியவர்களைப் போலத் தம்மிடம் வலிய விரும்பி இருந்து, தாம் பொருளிழந்த காலத்திலே விரும்பிச் சென்றபோதும், அன்பில்லாதவர்களாய் ஆட்டுக்கடாவின் கொம்பைப்போல மாறுபடும்படியான, மான் போலும் பார்வையினையுடைய, தமக்குரிய பொருட்பெண்டிர் தன்மையிலேயே நடக்கும் வேசையர்களுடைய பெரிய தனங்களை ஒருபோதும் விரும்பிச் சென்று சேரவே

L0[TLL_fT[T556T.

‘நல்ல வழியினை நாடுவோர், வேசையர் போகத்தை விரும்பவே மாட்டார்கள் என்பது கருத்து