பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 . நாலடியார்-தெளிவுரை

பெற்றிருக்கும் நல்ல அழகானது மிகச் சிறந்த வீரனாகிய ஆண்மகனது கையிலுள்ள கூர்மையான வாளைப் போலப் பலரும் புகழும்படியாகப் பெருமையுடன் விளங்கும்.

தலைவன் தலைவி உரிமையை வியந்து கூறியது இது

@Too LIIT.

387. கருங்கொள்ளும், செங்கொள்ளும், தூணிப் பதக்கென்று

ஒருங்கொப்பக் கொண்டானாம், ஊரன்-ஒருங்கொவ்வா நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது என்னையும் தோய வரும்!

ஊரனாகிய ஒருவன், கரிய கொள்ளையும் சிவந்த கொள்ளையும் அவற்றின் தன்மையறிந்து வேறுவேறாகக் கொள்ளாமல், கொள்ளென்னும் இயல்புபற்றியே ஒரு நீராகத் தூணிப் பதக்கென்று அளந்து வாங்கிக் கொண்டானாம். . அதுபோலவே முழுவதும் ஒத்திராத அழகிய நெற்றியையுடைய பொதுமகளிரை அநுபவித்த, மலை போன்ற மார்பினனான என் தலைவனும், நீராடாமல் என்னையும் தழுவுவதற்கு வருகின்றானாம்!

பரத்தையிற் சேர்ந்துவந்த தலைவனுடன் ஊடிய தலைவி, ‘நீராடாது தோயவரும் என்பதன் மூலம் அவனுக்கு இசையும் தன் கருத்தையும் உணர்த்துகின்றாள்.

388. கொடியவை கூறாதி, பாண நீ கூறின்,

அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின் இடக்கண் அணையம் யாம் ஊரற்கு, அதனால் வலக்கண் அணையார்க்கு உரை.

பாணனே கொடுமையான சொற்களை எம்மிடத்தே கூறாதே; ஏனெனில், யாம் ஊரனுக்கு உடுக்கையினது இடது பக்கத்தைப் போல இப்பொழுது பயனற்றவர்களாக இருக்கின்றோம். அதனால், அப்படிப்பட்ட விடத்தை விட்டு அப்புறமாக ஒதுங்கிச் சென்று, அந்த உடுக்கையின் வலது பக்கத்தைப்போல அவனுக்கு இப்போதெல்லாம் பயன்பட்டுக் கொண்டிருக்கின்ற வேசியருக்குச் சென்று சொல்வாயாக.

பரத்தையிற் பிரிந்த தலைவன், பாணன் மூலம் தலைவியின் இசைவைப் பெற முயல, அந்தப் பாணனுக்கு அவள் கூறியது

இது.