பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

4. புலியூர்க் கேசிகன் - 199

389. சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வயல் ஊரன்மீது

ஈப்பறக்க நொந்தேனும் யானேமன் -தீப்பறக்கத்

தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்

நோக்கி இருந்தேனும் யான்.

கோரைப் புல்லைப் பிடுங்க, நீர் விளங்குகின்ற

குளிர்ச்சியான வயல் சூழ்ந்த ஊர்களை உடையவனான என் தலைவனின் மீது ஈயானது பறக்கையிலும் அதனைக் காணவும் சகியாமல் முன்னம் நொந்தவளும் யானே, இப்போழுதோ, நெருப்புப் பொறி பறக்குமாறு வேசையர்கள் தமது தனங்களால் தாக்கிப் போர் செய்த, குளிர்ந்த சந்தனக் கலவையைத் தரித்த அவனது மார்பைப் பார்த்துப் பொறுத்திருக்கின்றவளும் யானே தான்!

‘பரத்தையோடு கூடிவந்த தலைவனோடு ஊடியிராமல், நீ, கூடியதென்னடி?’ என்ற தன் தோழிக்குத் தலைவி தன் மன நிலையை இப்படிக் கூறுகிறாள்.

390. அரும்பவிழ் தாரினான் எம்.அருளும் என்று

பெரும்பொய் உரையாதி, பாண -கரும்பின் கடைக்கண் அணையம் யாம் ஊரற்கு அதனால், இடைக்கண் அனையார்க்கு உரை.

பாணனே பூவரும்புகள் மலரும்படியான மாலையை அணிந்த எனது நாயகன் எனக்கு அருள் செய்வானென்று பெரிய பொய்யான சொற்களை என்னிடத்தே வந்து சொல்லாதே, ஏனெனில், ஊரனுக்கு, இப்போது யாம் கரும்பின் கடைசியிலுள்ள கணுவை ஒத்திருக்கின்றோம். அதனால், இப்பேச்சைக் கரும்பின் இடையிலுள்ள கணுக்களைப் போல் அவனுக்கு இப்போது இனிதாயிருக்கும் பரத்தையருக்குச் சென்று சொல்வாயாக. -

‘நாயகன் விரைந்து வருவான்’ என்ற பாணனிடம், தலைவி வெகுண்டு கூறுவது இது.

40. காமம் நுதலியல்

காம இன்பத்தின் முறைமையைப் பற்றிக் கூறும் இயல் இதுவாகும். இந்த ஓர் அதிகாரம் மட்டுமே காமத்துப் பாலிற் சாரும் எனவும் கொள்பவர் சிலர். அவர் முன்னிரண்டு அதிகாரங்களையும் பொருட்பாலுட் கொள்வர்.