பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

மரம் தான் காய்காது. அல்சேஷன் நாய்போல் அதனை அடிக்கடிக் கவனிக்க வேண்டும். கடை மக்கள் நட்பு பாக்கு மரம்; அவ்வப் பொழுது அவர்களுக்கு ஊக்கத் தொகை தந்து நட்பு ஆக்க வேண்டும்.

தென்னை மரம் ஒரு முறை நீர் ஊற்றினால் அஃது உன்னை மறக்காது; நெடுக வளர்ந்தாலும் அதன் புத்தி குறுகவே குறுகாது; காய் தரும், இடைப்பட்டவர் ஒரு முறை தரும் உதவிக்கு வாழ்நாள் வரை நன்றி காட்டுவர்.

பனை மரம் தானே வளரும்; தானே காய்க்கும் தானே தரும், பிறர் உதவிக்கு அது கை நீட்டுவதில்லை. வள்ளல் சாதி அது. அத்தகைய நட்பை உள்ளுக; இவர்களே தலையாய நட்பினர்.

அரிசி களைந்த கழுநீர்; அதுதான் அப்பொழுது கிடைத்தது; நல்லநீர் கொண்டுவர அவள் நாலுகாதம் செல்ல வேண்டி இருக்கிறது; கறிகாய் அதைப்பறி என்றால் அதனை அறியேன் என்கிறான். பசிக்குச் சோறு; புசிக்க வேறு தேவைப்படுகிறது. கொல்லைப்புறத்துக் கீரை அதனைப் புளியும் உப்பும் சேர்த்து அரைகுறையாக வேகவைத்து ‘உண்க அடிகளே’ என்று அமுத மொழிப் பேசிப் பரிமாறுகிறாள். சூடாக இருக்கிறது உணவு, குளிர்கிறது அவள் வார்த்தைகள். அமுதம் என்று கூறி அக மகிழ்வோடு உண்கின்றனர் வந்த விருந்தினர். அகம் நக ஒளிவிடும் நட்பு இது.

தடபுடலான வரவேற்பு; புடலங்காய்க்கூட்டு; எல்லாம் வெத்து வேட்டு, நீளம் அடி நான்கு தலைவாழை இலை; பரபரப்பு; சுறுசுறுப்பு; சலசலப்பு. எல்லாம் அடுக்கி வைக்கப்படுகின்றன. எடுத்து இட ஆள் இல்லை; நட்சத்