பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

பகைவர் அவர்கள் நமக்கு மிகைவன செய்வர். எனினும் அவற்றை மிகைப்படுத்தி வருந்தற்க; அறியாமை அவர்களை ஆட்கொண்டுள்ளது என்று அவர்களை மன்னித்துவிடு; தூயவர் ஆகிய நல்லோர் தவறுகள் செய்துவிட்டார் என்றாலும் அவர்கள் தெரிந்து செய்தவை அன்று என்று கொள்வதே நன்று ஆகும். நண்பனோ, பகைவனோ, யாவனோ எவனாயினும் என்ன? நட்பின் வகை அறிந்து அவர்கள் தகைமையைப் போற்றிப் பழகி வாழ்வதே சிறப்பு ஆகும்.

ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு அது சேறு என்று கூறினால் அது யார் தவறு? குறை நிறைகளை ஆய்ந்தே நிறை உடையவர் என்று கண்டபின்பே நண்பனைத் தேர்ந்து எடுக்க வேண்டும். தாலிகட்டிக்கொண்ட பிறகு வேலிபோட்டுக் கொண்டு விவாகரத்துக் கோருவது விவேகமன்று. ஏறக்குறைய நல்லது பொல்லது பார்த்து அறுத்துக் கொள்ளாமல் பொறுத்துக்கொள்வது நட்பிற்கு அழகாகும். செறிவுமிக்க நட்பு என்றால் பிரிவு அதனைத் தாக்காது.

24. கழுத்தறுப்புகள்

(கூடாநட்பு)

இருக்கும் வீடு ஒலையிட்ட கூரை, அது கிழிச்சல்; சுவர்கள் கசிவு, நீர் அதனைக் குளிர் சாதன அறை ஆக்குகிறது; தரை சேறு, சறுக்கி விளையாடலாம்; வெள்ளம் அணை தேடிக் கதவை முட்டுகிறது. நீர்ப்பஞ்சம் இனி இருக்காது; ஏன் வீடே அடித்துச் சென்றுவிடும். என் செய்வான் பாவம்! நீரை எறித்துக் கரை ஏற்றுகிறான்.