பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

பேசிக் காலம் கழிக்கும் குன்று அவன். அவனைச் சுற்றிக் கொண்டிருப்பது நன்று அன்று; நட்புதான் ஆனால் அது கூடாத ஒன்று; பயனற்றது.

தொட்டகுளம் ஒன்றுதான்; வெட்ட வெளிச்சம்; அதில் கழுநீர்ப்பூவும் ஆம்பலும் பக்கத்துப் பக்கக் குடி வாசிகள்தாம்; கழுநீர் வழுவுடையது; ஆம்பல் விழுப்பம் மிக்கது. வாசனைகள் வேறு; இது அது ஆகாது. அது இது ஆகாது. கீழோர் கீழ்மக்கள்தாம்; மேலோர் மேன்மக்கள் தாம். பிறப்புக்குணம் அவரவர்களை விட்டு விலகாது; அத்தகையவர் உறவு உனக்கு ஆகாது.

குட்டிக் குரங்குதான்; அது தன் நெட்டைத் தந்தையுடன் ஒட்டி உறவாட மறுக்கிறது. தந்தைக் குரங்கு கையகத்துப் பலாவைத் தட்டிப் பறித்துச் செல்கிறது. அப்பனுக்கும் மகனுக்கும் எவ்வளவு நெருங்கிய ஒற்றுமை மட்டு மரியாதை மறந்து விட்டால் இனி அப்பன் என்ன சுப்பன் என்ன? உறவு ஒட்டவில்லை என்றால் எட்டிப் போவது நல்லது.

ஆபத்துக்கு உதவாத நண்பன் அவன் பாபத்திற்கும் அஞ்ச மாட்டான். உயிரையும் தந்து காப்பதாக உறுதி கொடுத்த தோழன் பெயரையும் கூறாமல், “வந்தது சொல்ல வேண்டாம்” என்று இவன் படுக்கையில் கிடந்தாலும் நெகிழ்ந்து விடுகிறான். “இவன் எல்லாம் உன் தோழன்” என்று ஆழமான நட்பைக் காட்டினாயே அவன் உன்னை குழி தோண்டிப் புதைக்கும்போது விழிகளில் நீர் மல்க வந்து அழுது நடிப்பான்; துடிப்பான்; பழம் நட்புப் பேசிப் படிப்பான்; கவலைப்படாதே அழுவதற்கு ஒரு ஆள் இருக்கிறான்.