பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

நன்மை கருதும் நண்பனைக் கைவிட்டு விட்டு நயமாகப் பேசி நடிக்கும் புன்மையனை நயப்பது நெய் ஊற்றும் கிண்ணததில் அதை நீக்கிவிட்டு வேம்பு அதன் நெய் நிரப்புவது போல் ஆகும். இனிமை கெடுகிறது: கசப்புப்படுகிறது. தீய நட்பு நீக்குக; கட்டுவிரியன் கண்ணுக்கு அழகு தருவது; அதன் பெடை அதனோடே பழகும் ஆண் பாம்பு; கூடி மகிழ இணையலாம்; என்றாலும் அதன் உயிருக்கே அது ஆபத்து உண்டாக்கிவிடும். நண்பர்கள் நயமாக உரையாடுவர்; கவர்ச்சி மிக்கவராகக் காணப்படுவர். புகழ்ச்சிக்கு உரியவர் போல் தோற்றம் அளிப்பர். ஆனால் எந்த அளவும் நன்மை செய்ய மாட்டார்கள். இவர்கள் கட்டு விரியன்கள்; நாமே தேடிக் கொள்ளும் சனியன்கள். குடிக்கும் பால் என்று நினைத்தால் அவர்கள் வெறும் கலப்படம்தான்; தண்ணிர்தான் புலப்படும்.

25. அறிவே ஆக்கம் தரும்

(அறிவுடைமை)

அறிவு என்பது அறிந்து செயல்படுதல்; எப்பொழுது எது செய்தால் அது நன்மை தருமோ அப்பொழுது அதனைச் செய்வது அறிவுடைமையாகும். முனையிலே களைந்து விடலாம் என்று பகைவன் மெலிந்திருக்கும் நிலையில் அவனைத் தாக்குவது தற்காலிக வெற்றி தரலாம். “நொந்து கிடப்பவனை இவன் நோகடித்தான்” என்று இந்த உலகம் பழிதுாற்றும்; எதிரி தலை நிமிர்ந்து வாழும்போது நல்லது கெட்டது காண அவனோடு மோதினால் அஃது ஆண்மை; அந்த வெற்றி நிலைத்து நிற்கும்; குறுக்கு வழி சறுக்கிவிடும். திங்கள் பிறை வடிவில்