பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

சொந்த புத்தி கெடாமல் இருக்கும்போது ஒருவன் யாரோடு சேர்ந்தால் என்ன? பழகினால் என்ன? அவன் மனம் உறுதியாக இருக்கும்போது அவனை மடத்தனம் வந்து ஒன்றும் செய்யாது; கடற்கரைதான் நீர்தோண்டிப் பார்த்தால் நல்ல குடி தண்ணிர் ஊறுகிறது; மலைப்பகுதி தான்; அங்கே உப்புத் தண்ணிர் சில சமயம் சுரக்கிறது; வியப்பாக இல்லையா? நிலத்தியல்பால் நீர் திரியும் என்பர் வள்ளுவர். நீர் தன் நிலை கெடாமல் இருக்க வாய்ப்பு உள்ளது என்று நாலடியார் கூறுகிறது; புதிய கருத்து. இரண்டும் இரு கண்ணோட்டங்களில் உண்மையானதுதான்; கெடுவதற்கு வாய்ப்பு உண்டு; கெட வேண்டும் என்பது நியதி இல்லை; மாறுபட்ட கருத்துகள் அல்ல; துணை நிற்பன இவை.

நட்பு என்பது பூப்போன்றது; அது மலர்ந்து இருந்தால் தான் மணம் வீசும்; பூ வாடிவிட்டால் அதனை யாரும் நாடார். நட்பு அஃது ஒட்பு உடையது; எப்பொழுதும் ஒரே தன்மையது; கூம்பலும் மலர்தலும் இல்லாமல் ஒரு பூ இருந்தால் அதனைச் சிநேகிதத்திற்கு உவமை கூறலாம். எப்பொழுதும் ஒரே நிலையில் பழகுபவரே பண்புடைய நண்பினர் ஆவர். மலர்ச்சி பூவைப் போல அமையவேண்டும். நிலைபேறு காயாக முற்றிக் கனியாகக் கனிந்து இனிமைதர வேண்டும்.

சொன்னால் புரிந்து கொள்ளத் தேவை இல்லை; உணர்த்தினாலேயே உணரும் உயர்வு உள்ளவரே உயர்ந்த நண்பர் ஆவர்; பன்னிப் பன்னிப் பலமுறை எடுத்துப் பகர்ந்தாலும் செவியில் சேர்க்காத முரடர்கள் அவர்கள் தொடர்பினை அறுத்துக் கொள்வதுதான் ஆக்கம் தரும்; துன்பத்தினின்று விடுதலை கிடைக்கும். உணர்ச்சிதான்