பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

நட்பாம் கிழமை தரும். மெல்லிய உணர்வுகள் துல்லியமாக அறிபவரே நல்லியல் உடையவர் ஆவர்.

உன்னை நீதான் உயர்த்திக் கொள்ள வேண்டும்; யாரோ வந்து கைதுக்கி விடுவார்கள் என்று பைதுக்கிச் செல்ல வேண்டாம். தன்னை உயர்த்துபவனும் தான் தான்; தாழ்த்திக் கொள்பவனும் தானே தான். நிலையில் இருந்து படிப்படியாக வளர்பவனும் அவனேதான். எல்லாம் அவரவர் கைகளில்தான் இருக்கிறது; அழித்துக் கொள்ளலாம்; விழித்துக் கொள்ளலாம்; எப்படியும் வாழலாம்.

கப்பல் கரை சேர்கிறது என்றால் கலத்தின் மாலுமிக்குப் பாராட்டு; அவன் தன் கடமையில் கருத்துான்றினான் என்பது அதன் விருத்தம்; எடுத்த கருமத்தைத் தொடுத்து முடிக்கவும்: தெய்வம் கொடுத்த பொருளைக் கொண்டு இன்பம் துய்க்கவும்; மகிழ்ந்து உண்க. அதற்கு மேல் ஒருபடி; அதை நீ படி; ஆன்றோர் சொற்படி தருமத்துக்குக் கீழ்ப்படி. இயன்றவரை தருமவினை கடைப்பிடி; இவையே வாழ்க்கைப் படிகள்; இம் மூன்றையும் விடாப்பிடியாகக் கொண்டு நடந்து கொள்க. வாதம் விடுக; தருமத்தில் பிடிவாதம் காட்டுக.

26. படித்துக்கொண்டே இரு

(அறிவின்மை)

நுட்பமான அறிவு இல்லை என்றால் அவர் வறியவருக்கு நிகராவார்; ஒட்பமான அறிவு உடையவர் பெருஞ் செல்வருக்கு நிகராவர்; பேடிகள் பெண்மை அவாவு