பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

கின்றனர். பெண்களைப் போல் தம்மை அலங்கரித்துக் கொள்வர். பயன்? அவர் பெண் ஆக முடியாது. அது போல கலகல என்று தன்னை மிகைப்படுத்திக் கொள்பவர் கல்லாதவர், ‘பொல பொல’ என அறிவுடையவராகத் திகழ்வது அவர்களால் இயலாது.

இதனை நினைத்துப் பார்த்தாலே வியப்பாக உள்ளது: நூல் பல கற்றவர்; அவர் வீட்டு அடுப்பில் பூனை தூங்குகிறது. கேட்டால் “இனிமேல்தான் கடைக்குப் போக வேண்டும்” என்று கதைக்கிறாள் அந்தக் கற்றவர் மனைவி; “என்னப்பா நீ பல நூல் கற்று எல்லாம் தெரிந்தவனாக இருக்கிறாய்; பஞ்சப் பாட்டுப் பாடுகிறாயே” என்று கேட்டால் அவர் தன் வீட்டில் மாட்டி வைத்த சரசுவதியின் படத்தைக் காட்டுகிறார். “இரண்டு படத்துக்கு இங்கு இடமில்லை” என்கிறார். “திருவேறு தெள் ளியராதல் வேறு, இந்த உலகத்தின் இயற்கை இது” என்று கூறுகிறார். “கலைமகள் இங்கு இருப்பு; அலைமகள் உள்ளே வர மறுக்கிறாள்” என்று நகைத்துக் கொண்டே விடை தருகின்றார்.

“பள்ளிக்குச் செல்லு” என்று படித்துப் படித்துக் கூறினார் பையனின் தந்தை, துள்ளிக் குதிக்கும் பருவம்; எள்ளி நகையாடினான் அன்று. அடித்தும் பார்த்தகர். படியாத மாடாகி விட்டான். ‘கல்’ என்று சொன்னால் அவன் அது ‘தக்க சொல்’ என்று எடுத்துக் கொள்ள வில்லை. இன்று அவன் நிலைமை என்ன? பலபேர் கூடியிருக்கும் அவையில் நீட்டோலை வாசிக்க முடியாத நெடுமரமாக நிற்கிறான். ‘ஏடு அறியேன் எழுத்து அறியேன்’ என்று நாடோடிப் பாடல் பாடுகிறான். அவன் அங்கே நிற்க முடியாமல் நாணி அந்த இட த்தை விட்டு ஓடோடி வந்து