பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

சேர்கிறான். கல்லாதவன் நிலை இதற்குமேல் எப்படிச் சொல்ல முடியும். அன்று அடித்துத் திருத்தியபோது படித்துத் தொலைக்காதவன் இன்று படும் வேதனை இது.

இரும்பு அடிக்கின்ற இடத்தில் ஈயிற்கு என்ன வேலை? அந்தச் சூடு அது தாங்காது. கற்றவர் அவையில் கல்லாதவர் செல்வது அவனுக்கு எந்தப் பயனும் விளையாது. அவன் வாயைத் திறந்தால் நாய் குரைக்கிறது என்பர். அவன் எதுவும் உரையாமல் இருந்தாலும் நாய் கிடக்கிறது என்பர். கத்தினாலும் தப்பு: சத்தமில்லாமல் சுத்தமாக இருந்தாலும் அஃது ஏற்கப்படுவது இல்லை.

படித்தவன்தான்; பட்டம் பெற்றவன்தான். ஆனால் முழுவதும் கல்லாதவன்; அவன் வாயைத் திறக்கிறான். சும்மா இருந்தால் சுகம்; தன் கல்வித் திறனைக் காட்ட உளறுகிறான். ஆழப்படிப்பு இல்லை; புதிதாகத் தெரிந்து கொள்ளும் ஆவலும் இல்லை. அவர்கள் கற்றவர்கள் என்று கருத முடியாது. மேலும் கற்பதே கல்வி என்று கருதப்படும். தொடர்ந்து நூல்களைக் கல்லாமை அறிவு விளக்கத்திற்குத் தடையாகும்.

அவனைப் பார்த்தால் படித்தவன் போல் தெரிய வில்லையே என்று ஒருசிலர் பேச ஆரம்பிக்கின்றனர். ஏன் அவையின் கண் அடங்கி இருக்கத் தெரியவில்லை. அவசரப்படுகிறான்; அடித்துப் பேசுகிறான்; அவன் படித்தும் பேதை என்பதைக் காட்டிக் கொள்கிறான்.

தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசன்டன் என்பார். பனை ஒலை சலசலக்கிறது; அதில் பசுமை இல்லை; பச்சையோலை சலசலப்பு செய்வது