பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

இல்லை; அது ஈரம் தாங்கி நிற்கிறது; கற்ற அறிவாளிகள் அடக்கம் காட்டுவர்; அருமையாக ஒருசில பேசினாலும் அவைபெருமை காட்டக் கூடியவை; ஆய்வுக் கருத்துகள் மிகச் சிலவாகத்தான் இருக்கும்; அதை உலகம் வியந்து வரவேற்கிறது. நுட்பமாகப் பேசுபவர் மிகுதியாகப் பேசிக் கொண்டிருக்க மாட்டார். கத்திப் பேசினால் கற்றவன் என்று மதித்து விட மாட்டார்கள்.

பன்றிக்குக் கூழ் ஊற்றும் தொட்டில் அதில் மாம்பழச் சாறு ஊற்றினால் அந்தப் பன்றிக்கு அதன் அருமை தெரியப்போவது இல்லை. பாறைக் கல்லிலே முளைக்குச்சி அடித்தால் அது பிளவுபடப் போவது இல்லை; செவிடன் காதில் சங்கு ஊதினால் அது மற்றவர்களைத்தான் செவிடாக்கும். அரிய கருத்துகளை அறிந்து பயன்படுத்திக் கொள்வார் முன்பே அவற்றைக்கூறவேண்டும்; பல்லில்லாத கிழவிக்குக் கல்முறுக்குத் தந்தால் அவள் என்ன செய்ய முடியும்? முறுக்குக் கல் என்பாள் கல்வி கடுமை என்பான் கல்லாதவன்.

கரித்துண்டு அதை வெளுத்துக் கட்டுவது என்று ஒருவன் பாலில் கழுவி அதை உலர்த்துகிறான்; அது உளுத்துப் போகுமே அன்றி நிறம் மாறாது; கருப்பு நாயை எவ்வளவு தான் தேய்த்துக் குளிப்பாட்டினாலும் அது வெள்ளை நிறம் பெறாது. முரடன்; படிக்க மனம் இல்லாதவன் அடித்து அடித்துப் படிக்க வைத்தாலும் அவன் மண்டையில் ஏறப்போவது இல்லை; இந்த மாட்டு ஜென்மங்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. என் செய்வது?

நறுமலர் பூத்த நந்தவனம்தான்; அங்கே தேனீ சுழன்று திரியும்; தேனருந்தும், பயன் பெறும். கழிசடையில் மேயும்